நாமசங்கீர்த்தனம் அடிமனதிலிருந்து எழ வேண்டும்!

நாமஸங்கீர்த்தனம் வெறம் வாயளவோடு இருக்கக் கூடாது. நம் மனத்தின் அடித்தளத்திலிருந்து எழ வேண்டும்.
ஸகுண உபாஸனையின் ஒரு அம்சம் தான் பகவன் நாம பஜனமாகும். நிந்தையில்லாத பக்தியோடு கூடியதாக இந்த பஜனம் அமைய வேண்டும். ஒரு தேவதையின் நாமத்தைஉயர்வாகக் கருதும் அதே நேரத்தில் மற்ற தேவதைகளின் நாமங்களைப் பழிக்கவோ தூஷிக்கவோ கூடாது.
சிரத்தையோடு கூடிய நாம பஜனமே சிறந்தது. சிரத்தையிருந்தால்தான் பிரஹ்ம ஸ்வரூபத்தைக் காண முடியும். சிரத்தையுடன் பகவந் நாம பஜனம் செய்பவனுக்கு எல்லா பாபங்களும் விலகுவதுடன், இனி பாப வழியில் அவன் செல்லமாட்டான்.
பகவந்த நாம பஜனம் செய்பவர்கள் அவரவர்களுக்கு ஏற்பட்ட முக்யக் கடமைகளான நித்யநைமித்திக கர்மாக்களைத் தவறாது செய்து கொண்டு அதற்கு விரோதமில்லாத முறையில்தான் பஜனம் செய்ய வேண்டும். தன் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் எவ்வளவு பஜனம் செய்தாலும் ஈசுவரனது அருளைப் பெற முடியாது. மேலும் நாம பஜனத்திற்குப் பொறுமை முக்யமாக இருக்க வேண்டும். என்ன கஷ்டங்கள் நேர்ந்தபோதிலும் யார் என்ன சொன்னாலும் கோபத்தை அடையாமல் பொறுமையுடன் பஜனம் செய்து வர வேண்டும்.
நேரமில்லை என்று கூறுகிறவர்கள் கூட அன்றாடம் காலையில் துயிலெழும்போது “ஹரி ஹரி” “ஹரி ஹரி” என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.
இந்த நாமத்தை உரக்கச் சொன்னால் அடுத்தவர்கள் காதில் விழும். அவர்களும் பயன் பெறுவார்கள்.
வெளியே எங்காவது புறப்பட்டுப் போகும் போது “கேசவா” என்று உச்சரிக்க வேண்டும்.
“கேசவா” என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.
உணவு உட்கொள்ளும் முன்பு “கோவிந்தா” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.
இரவு படுக்கச் செல்லும்போது “மாதவா” என்று கூற வேண்டும்.
இறைவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை, ஹிந்துதர்மப் பெயரியவர்கள் கண்டுணர்த்திய இறைவனது நாமங்களைச் சொல்வோம். நலமாக வாழ்வோம்.
- ஆர்.பி.வி.எஸ். மணியன
Featured Video
மாத பலன்கள்
Newsletter Sign Up
Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!