செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - கும்பம்

செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - கும்பம்

திறமையும், அறிவாற்றலும் கொண்டு விளங்கும் கும்ப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி ராசியில் ஆட்சி பெற்று அமைவதும் குரு பார்வை பெறுவதும் சிறப்பான நற்பலன்களை பெற்றுத் தரும். உறுதியான செயல்பாடுகள் மூலம் வெற்றி பயணம் தொடரும் போது நினைத்தபடி எல்லாம் அமைய வழி கிடைக்கும். சிலர் தன் பிடிவாதத்தால் காரியத்தை தள்ளி போடுவார்கள். சிலர் சுறுசுறுப்பாக இயங்கி மேல் நிலை அடைவார்கள். தனாதிபதியான குரு பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் உடல்நலன் சிறப்பாக இருக்கும். கவலைகளை மறந்து எதிர்கால நலன்களை பற்றி சிந்தனையில் இருப்பீர்கள். 
 
குரு லாபஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் தொழில் மூலம் பொருளாதார வளம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, பாராட்டுதல்கள் பெறுவார்கள். நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையின் உங்களுக்கு பக்கத்திலேயே எதிரிகள் இருப்பார்கள். எதை செய்ய கூடாது என்று சொல்வார்களோ… அவர்கள் அதை செய்து காட்டுவார்கள். உடன் இருப்பவர்களை கவனித்து வருவது மிகவம் அவசியம்.
 
அரசியல் தலைவர்களின் சந்திப்பும், தொடர்பும் உங்களின் எதிர்கால நலனுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கோவில் பணிகளில் சில உதவிகள் செய்வீர்கள். எமக்கு என்று எதையும் சேர்த்து வைக்காமல்.. எல்லோருக்கும் பயன்படும் வகையில் உங்களின் செயல்பாடு அமையும். மாணவர்கள் கல்வியில் மேல்நிலை அடைவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் எதையும் செய்யாமல் இருக்கமாட்டீர்கள். 
 
உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கு என்று நினைத்து அதற்கு தகுந்தபடி சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். விளையாட்டுத் துறையில் வளர்ச்சியை பெறுவீர்கள். உறவுகளை புதுப்பித்து கொள்வீர்கள். மனித நேயமுடன் செயல்பட்டு உதவி கரங்களை நீட்டி பல உதவிகளை செய்து தருவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
சனி, ஞாயிறு, வியாழன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
21-09-2025 ஞாயிறு மாலை 05.19 முதல் 24-09-2025 புதன் அதிகாலை 03.24 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமைகளில் காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வணங்கி வரவும். செவ்வாய்கிழமை முருகன் வேல் வழிபாடும், சிவப்பு நிற பூ வைத்து நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.