சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - விருச்சிகம்

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - விருச்சிகம்

மனவலிமையும், துணிச்சலும் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு முயற்சி ஸ்தானத்திற்கும், சுகஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் இனிவரும் 06-03-2026 முதல் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும், தன ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். இதுவரை அர்த்தாஷ்டம சனியாகவும், ராசியையும் பார்த்ததால் சொல்ல முடியாத பல கஷ்டங்களை நன்கு அனுபவித்து வந்தீர்கள். இனி அதிலிருந்து விடுதலையை பெறுவீர்கள். குறுகிய கால முதலீடுகளால் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து செயல்படுவீர்கள்.
 
உங்களின் ராசியில் உச்சம் பெறும் சனி பகவான் சத்ரு ஸ்தானத்தில் அமர்வது கடந்த கால செயல்பாடுகளில் இருக்கும் சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். சிலர் வீட்டு கடனை அடைக்க முடியாமல் கஷ்டபட்டு இருந்த நிலை மாறும். வருமானத்தை பெருக்கி கொள்ள வாய்ப்புகள் அமையும். எந்த நோக்கம் உங்களை இதுவரை பின்னைடவு அடைய செய்ததோ அதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். கூட இருந்தே உங்களின் வளர்ச்சிக்கு தடையாக செயல்பட்டவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். அடிக்கடி உடல் நல குறைவு வந்ததிலிருந்து விடுபடுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் நீங்கள் உங்களின் பதவிகளை தக்கவைத்து கொள்வீர்கள்.
 
உங்களின் உழைப்பிற்கு தகுந்த வருமானம் கிடைக்கும். தொழிலாளர்களின் உரிமைகளை பெற்று தருவதில் உங்களின் கொள்கைகளிலிருந்து மாறாமல் வாங்கி தருவீர்கள். எதையும் போராடி பெற்று தருவதில் மிகவும் உறுதியுடன் இருப்பீர்கள். சுமைகளை இறக்கி வைத்து வளம் பெறும் வழிகளை தேடி சென்று நற்பலன் பெறுவீர்கள். விளையாட்டு வீரர்கள் சவாலான பல போட்டிகளில் கலந்து கொண்டு திறமையை வெளிபடுத்தி பாராட்டு பெறுவீர்கள். சட்டம் ஒழுங்கு நிலை நாட்டும் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வெகுமதி பெறுவீர்கள். எதையும் பொருட் படுத்தாமல் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். புத்திரர்களின் வேலை வாய்ப்பு உறுதி செய்ய எடுக்கும். முயற்சி நன்மையை தரும். கணவன் மனைவி உறவு சற்று சலசலப்பாக இருந்தாலும் பெரிய பாதிப்பை தராது. அவ்வப்போது வந்து போகும் கருத்து வேறுபாடுகளுடன் இருந்தவர்கள் தன்னை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
 
செய்யும் தொழிலில் நல்ல வருமானம் பெற்று இருந்தாலும் அதனை வேறு முதலீடுகளில் முதலீடு செய்து மேலும் வருமானத்தை பெறுவீர்கள். ஆயுள் காப்பீடு, தொடர் வைப்பு என்று எடுக்கமுடியாத சேமிப்புகளை செய்வீர்கள். எதையும் யோசித்து செயல்படுவீர்கள். மற்றவரையும் வளம் பெற உதவிகளை செய்வீர்கள். உங்களின் பேச்சும், செயலும் தெளிவாக அமையும்.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடுகள் செய்து வெண்ணெய் வாங்கி சாற்றி வெற்றிலை 108 மாலை கட்டி போட்டு ஸ்ரீராமஜெயம் சொல்லி வர உங்களின் சகல காரியமும் நினைத்தபடி சிறப்பாக அமையும் வேண்டியதை அடைவீர்கள்.