சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - சிம்மம்

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - சிம்மம்

துணிச்சலுடன் எதையும் செய்யும் மனவலிமை கொண்ட சிம்ம ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு சத்ரு ஸ்தானத்திற்கும், களத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் உங்களின் ராசிக்கு தன ஸ்தானத்தையும், பஞ்சம ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வை இடுவதும் அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் வெற்றியையும் கால மாற்றங்களால் ஏற்படும் சூழ்நிலைகளால் ஆதாயமும் பெறுவீர்கள்.. தனி திறமையுடன் செயல்படுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு சத்ரு ஸ்தானாதிபதியான சனி பகவான் அட்டம ஸ்தானத்தில் அமர்வது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல உங்களின் அனைத்து காரியமும் சிறப்பாக நடைபெறும் வாய்ப்பை பெறுவீர்கள். அட்டம குரு விரைய ஸ்தானத்தில் அமர்ந்து அட்டம சனியை பார்ப்பது அந்த வீட்டிற்கு குரு சனியை பார்ப்பது மேலும் நற்பலன்களை பெற்று தரும். அதிகாரத்தில் உயர் பதவி அடைவதும், இருக்கும் பதவிகளில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டு பெறுவதும் உண்டாகும். அரசியலில் ஈடுபாடு கொள்பவர்களுக்கு அதிசயத்தக்க நல்ல பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் வந்து சேரும்.
 
கலைத்துறையினர் வருமானத்திற்கு தகுந்த வளர்ச்சியை பெறுவீர்கள். காலத்தை அறிந்து நீங்கள் எதை செய்தாலும் வளர்ச்சியை பெறுவீர்கள். குறுகிய கால முதலீடுகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உறவுகளில் இருந்த விரிசல் இனி முடிவுக்கு வரும். தொழில் செய்து வருபவருக்கு தொழிலில் கூடுதல் நற்பலன் உண்டாகும். வெளிநாட்டு தொழில்களில் வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். எதற்காகவும் யாருக்கும் நீங்கள் முடிவெடுத்த விடயத்தை விட்டு கொடுக்க மாட்டீர்கள். நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும். தனிதிறமையுடன் செயல்படும் உங்களின் கொள்கைகளை மேம்பாடு அடைய செய்ய பாடுபடுவீர்கள்.
 
பெரும்பாலும் யாருக்கும் பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. பிறருக்கு கடன் வாங்கி தருவதும், தான் என்று ஏற்று கொள்வதும் நல்ல தல்ல. முடிந்த வரை தவிர்ப்பது நல்லது, நல்ல விடயங்களை முன்னின்று செயல்படலாம். பணம் சார்ந்த பரிவர்த்தனை தவிர்ப்பது நல்லது.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவர், நரசிம்மர் வழிபாடு செய்வது நல்லது. மூன்று நெய் தீபம் ஏற்றி தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து பக்தர்களுக்கு தானம் செய்து வர, நீங்கள் எண்ணிய எண்ணம் சிறப்பாக அமையும்.