தியானம் என்றால் என்ன? Meditation For Beginners

தியானம் என்றால் என்ன? Meditation For Beginners

தியானம் ஒரு கிளர்சியுட்டும் அனுபவம். அதுவரை அறிந்திராத ஒன்று குறித்த அனுபவம். மனித மனம் மேற் கொள்ளும் மகத்தான அனுபவம். தியானத்தில் அப்படியே இருக்கிறிர்கள் எதையும் செய்யாமல் செயலில்லை, சிந்தனை இல்லை, உணர்ச்சி இல்லை, அது ஒரு முழுமையான உவகை நிலை. நீங்கள் எதையும் செய்யாமல் இருக்கும் போது இந்த உவகை எங்கே இருந்து வந்தது? அது எங்கும் இன்றி வரலாம், எங்கு இருந்தும் வரலாம். அது வினை முதலற்றது. மகிழ்ச்சியால் நிரம்பி இருப்பது.

தியானத்தின் எந்த நிலையிலும் நீங்கள் உடல்சார்ந்த விதத்தில்லோ மனம் சார்ந்த விதத்தில்லோ எதையும் செய்வது இல்லை. எவ்வித நிகழ்வும் இன்றி அனைத்து செய்கையும் நின்றுவிட நீங்கள் சும்மா இருக்கிறீர்கள். அது நீங்கள் செய்யக் கூடியதும் அல்ல. பயிற்சி பெறக் கூடியதும் அல்ல. அதன் இயல்பை அறிந்துக் கொள்ளுகிறிர்கள்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இருக்கிற படியே  இருங்கள் ஆழ்ந்து சிந்திப்பதும், ஒரு முனைப் படுத்துவதும், எண்ணமிடுவதும் ஒரு வேலையே! நீங்கள் எதையும் செய்யாமல் முற்றிலும் ஓய்வாக ஒரே ஒரு கணம் உங்கள் மையத்தில் இருக்க முடிந்தால் அது  தியானம். அந்தத் திறமையை நீங்கள் பெற்ற பிறகு, உங்களுக்கு விருப்பம் உள்ள வரை அதே நிலையில் தங்கி இருக்க முடியும். நிறைவாக இருபத்தி நான்கு மணி நேரமமும் அதே நிலையில் உங்களால் இருக்க முடியும்.

உங்களுடைய அமைதி குலையாமல் இருக்க முடிகிற போது, நீங்கள் நிதானமாய் செயல்படத் தொடங்கலாம், உங்கள் இருப்பு நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகைகள் கவனமாக இருங்கள், அதுவே தியானத்தின் இரண்டாவது பகுதி. முதலில் ஓய்வாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள், அடுத்து தரையை சுத்தம் செய்வது, நிரில் குளிப்பது போன்ற சின்ன சின்ன செயல்களை உணர்வுடன் கவனமாக செய்யுங்கள். 

பிறகு சிக்கலான செயல்களை உங்களால் எளிதாக செய்ய இயலும். உதரணமாக நான் உங்களுடன் பேசிக்கொண்டு இருந்தாலும் என்னுடைய தியான நிலைக்கு இடையுறு ஏற்பட்டு விடவில்லை. நான் பேசிக்கொண்டே இருந்தாலும் என்னுடைய மையத்தில் (center) எந்தஒரு அலையும் எழும்பாது அது முழுவதும் நிசப்தமாய் இருக்கும்.

ஆகவே தியானம் செயலுக்கு மாறானது அல்ல .அது வாழ்வில் இருந்து விலகி செல்வதும் ஆகாது. ஒரு புதிய வாழ்க்கைமுறையை அது உங்களுக்குப் போதிக்கிறது. நீங்கள் சுழல்காற்றின் மையமாக இருக்கிறிகள்.

தியானத்தின் முழுமையான ரகசியமே நீங்கள் எல்லாவற்றையும் சாட்சியாக பார்பதுதான். செய்கை தன்னுடைய தளத்தில் தொடர்கிறது, எவ்வித பிரச்னையும் இல்லாமல் மரத்தை வெட்டுவது, கிணற்றில் நீர் இறைப்பது என்று தொடர்கிறது, நீங்கள் சிறியதும் பெரியதுமாய் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் மையத்தில் இருந்து மட்டும் வழி தவறிவிட வேண்டாம். உங்கள் விழிப்புணர்வும், கவனித்தலும் (விருப்பு, வெறுபற்ற) சிதைந்து விடாமல் அப்படியே இருக்க வேண்டும்.