சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - கும்பம்

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - கும்பம்

நெஞ்சில் துணிவும், செயலில் உண்மையும் கொண்டு விளங்கும் கும்ப ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு ராசிநாதனும், விரையாதிபதியுமான சனி பகவான் தனஸ்தானத்தில் அமர்ந்து சுகஸ்தானத்தையும், அட்டம ஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவது நீங்கள் எதிர்பார்த்த காரியம் கைகூடும் சூழ்நிலையை தருவார். எதை நினைத்து இது நாள் வரை வருத்தம் கொண்டீர்களோ.. இனி அதிலிருந்து விடுதலை பெற்று நன்மை அடைவீர்கள். எதை சாதனை என்று நினைத்து செயல்பட்டீர்களோ அதனை செயல்படுத்தி காட்டுவீர்கள். வாழ்க்கை இனிதாக வாழ்வதற்குதான் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். பாதசனியாக சனி அமர்வதால் இனி 06.03.2025 முதல் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.
 
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தை பார்க்கும் சனி உடல் நலனின் கவனம் செலுத்துப்படியான சூழ்நிலை உண்டாகும். எதை செய்தாலும் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். தாயாருக்கு பீடையும், மருத்துவ செலவு செய்ய வேண்டிவரும், வீடு பராமரிப்பு செலவு செய்ய வேண்டிவரும். புதிய வீடு கட்ட முயற்சி செய்தால் விரைவில் நடக்கும். கனவுகளை நனவாக்க அதற்கான யுக்திகளை கையாளுவீர்கள். புதிய திட்டம் எதுவாக இருந்தாலும் சில காலம் தள்ளி வைத்து விட்டு இருப்பதை சிறக்க செய்யும் பணியை செயல்படுத்துவது. நல்லது. குடும்ப சனி, பாத சனி நடப்பதால் உறவினர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் வரும். எதை பேசினாலும் கவனமுடன் பேசுவது நல்லது.
 
உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். லாபஸ்தானத்தை சனி பகவான் பார்வை இடுவது மிக சிறப்பான பலன்களை பெற்று தரும். எதை செய்தால் நல்லதோ அதை மட்டும் கவனம் செலுத்தி செயல்படுவது நல்லது. சனி பவானை ஓராண்டு குரு பார்வைச் செலுத்துவதால் பாத சனி முதலில் பெரிய பாதிப்பை தராது எனினும் பின்பு அதன் தாக்கம் இருக்கும். கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பீர்கள். கடந்த கால நிகழ்வுகளை மறந்து எதிர்கால சிந்தனைகளை உருவாக்கி கொண்டு செயல்படுவது நல்லது. வாகன ஓட்டிகள் சாலைகளில் சற்று அவசரமின்றி கவனமாக செல்லுவது நல்லது.
 
அட்டம ஸ்தானத்தை சனி பார்வை இடுவது அடுத்தவருக்கு பிணையம் இடுதல் பணியின் போது பிறர் பழியை தான் ஏற்றுக் கொள்தல் இது போன்ற காரியங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையுடன் கண்காணித்து செயல்படுவது நல்லது. ஆன்லைன் வர்த்தகம் அதிக முதலீடுகளை தவிர்ப்பதும் ஆடம்பர பொருட்கள் மீது முதலீடு செய்வதும் தவிர்ப்பது சாலசிறந்தது.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலையில் ராம் எழுதி போட்டு நெய் தீபம் ஏற்றி வாழைப்பழம் வைத்து வேண்டிக் கொள்ள நீங்கள் வேண்டிய படி அனைத்து காரியமும் வெற்றியை தரும். பொருளாதார நிலை மேன்மை உண்டாகும்.