சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - தனுசு
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்து பலன் பெறும் தனுசு ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு தன ஸ்தானாதிபதியும், கீர்த்தி ஸ்தானாதிபதியுமான சனி பகவான் ராசிக்கு சுகஸ்தானத்தில் அர்த்தாஷ்ட சனியாக அமர்கின்றார். குரு பார்வை ஓராண்டுக்கு இருப்பதால் ஆரம்பத்தில் எந்த வித பாதிப்பையும் தரமாட்டார். சனி பார்வை சத்ரு ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும், ராசியையும் பார்வை இடுகிறார். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்தல், நினைத்த நேரத்தில் வேலையை முடித்துக் கொள்தல் நிகழ்வுகள் நடக்கும். எதிலும் அவசரமான முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
உங்களின் ராசிக்கு சத்ரு ஸ்தானத்தை சனி பார்வை இடுவது இதுவரை பல கடன் தொல்லைகளை அடைந்து வந்தீர்கள். நினைத்தபடி எதுவும் நடக்காமல் தடைபட்டு வந்த இனி அதிலிருந்து விடுதலை பெற்று கடன்கள் விரைவில் அடையும் வாய்ப்புகளை பெறுவீர்கள். சரியான குறிக்கோள் இல்லாத பயணம் எல்லைக்கு போகாது என்பது போல் எதை நோக்கி பயணம் செய்கின்றீர்கள் என்பதை முழுமையாக உணர்ந்து செயல்படுங்கள். அது உங்களை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று தரும். தொழில் ஸ்தானத்தை சனி பார்ப்பது உங்களுக்கு இதுவரை எந்த தொழிலும் முடிவில்லாமல் இருந்து வந்தது அதனை இனி நல்ல முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.
யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் நீங்கள் முடிவு எடுத்தால் யாரின் எதிர்ப்பும் இல்லாத வகையில் அமைத்து கொள்வீர்கள். அறிவு ஆற்றல், விசுவாசம், பெருமை, கவலை துக்கத்திற்கு உரியவரான சனி பகவான் அதனை செயல்படுத்தும் போது உங்களுக்கு கடுமையான பாதிப்பை தரமாட்டார். உங்களின் அரசியல் செல்வாக்கு அரசியல்வாதிகளின் தொடர்புகள் நல்ல பலன் பெற்று தரும். புதன் வீடு உங்களுக்கு தொழில் ஸ்தானமாக அழைவதால் ஜவுளி, கணிணி சேவை தொலை தொடர்புகள் சார்ந்த பணிகள் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி கொள்வீர்கள். ராசியை சனி பார்ப்பது உங்களின் உடல் நலனில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். சோதனைகள் யாவையும் சாதனை அடக்கி கொள்வீர்கள்.
வாகன விபத்துகள், வாகன பழுது அடிக்கடி வரும் என்பதால் வாகனங்களில் கவனமாக செல்வது நல்லது. வீடு சம்மந்தமான கடன் பெறுதல், கடன் பெற்று வீடு கட்டுதல் முதலிய பணிகள் செயல்பட உதவிகள் இனி கிடைக்கும். கலைத்துறையினருக்கு சில வசதிகளை பெறுவீர்கள். அதிக அலைச்சல் உண்டாகும். பயணம் தொடரும். வெளியூர் செல்வதால் அடிக்கடி நடக்கும்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அரளி பூ மாலை முந்திரி பருப்பு மாலை கட்டி போட்டு வெண் பூசணியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர உங்களின் அனைத்து வேண்டுதலும் விரைவில் நடக்கும். கண் திருஷ்டி மறையும். பொருளாதாரம் சிறக்கும்.
















