அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - சிம்மம்
திட்டமிட்ட சில காரியங்களை விரைவில் முடிக்கும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சூரியன் தனஸ்தானத்தில் அமர்வது பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். அரசியலிலும், பொது வாழ்விலும் விரைவான வளர்ச்சியைப் பெறுவீர்கள். கருத்து ஒற்றுமை உள்ளவர்களிடம் தொடர்பு கொள்வீர்கள். அரசியலில் புதிய நண்பரின் தொடர்பு உங்களுக்கு வளர்ச்சியை பெற்று தரும்.
ராசியில் கேது அமர்வது உஷ்ணம் சார்ந்த சில பிரச்சனைகள் உண்டாகும். வேனல் கொப்புளம், தோல் ஒவ்வாமை போன்ற உபாதைகள் உண்டாகும். சிலருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மூன்றாமிடத்தில் புதன், சுக்கிரன் இணைவு பெறுவது குடும்பத்தில் சிறு சிறு சச்சரவும், ஞாபக மறதியும் உண்டாகும். சிறிய விபத்துகள் ஏற்படும் மற்றபடி எல்லாம் நன்மையாக அமையும். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை பெறுவீர்கள். காலத்திற்கு தகுந்தபடி உங்களை மாற்றிக்கொண்டு மற்றவர் களிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். புத்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள்.
ஏழாமிடத்தில் ராகு கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். பிற மதத்தவரின் உதவியும் கிடைக்கும். அட்டமத்தில் சனி இருந்தாலும் பெரிய பாதிப்பு தரமாட்டார் எனினும் பிணையம் இடுவது தேவையற்ற விடயங்களில் தலையீடு கொள்வது சரியான முடிவு எடுக்காமல் தள்ளி போடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்வது தொழிலில் ஓரளவு நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். அரசியலில் தனித்துவம் கிடைக்கும். விரையத்தில் குருவும், செவ்வாயும் இணைவு பெறுவது பொருளாதாரம் நல்ல வளம் பெற்றாலும் செலவீனங்கள் உண்டாகும். நல்ல நண்பர்களின் மூலம் உங்களின் வசதியை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பலவர்ணம், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தெற்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
23-10-2026 வெள்ளி பகல் 02.04 முதல் 25-10-2026 ஞாயிறு இரவு 08.00 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி செவ்வரளி பூ மாலை இட்டு உங்களின் வேண்டுதனால் சொல்லி வர எல்லாம் நன்மையாக அமையும்.
















