அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - ரிஷபம்

அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - ரிஷபம்

மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆறாமிடத்தில் ஆட்சி பெற்று அமர்வது வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கடல் கடந்த செய்தி நற்செய்தியாக அமையும். மூன்றாம் அதிபதி சந்திரன் ராசியில் உச்சம் பெறுவதும். உங்களின் அதிகார அந்தஸ்தையும், வெளிபடையான பேச்சும் முன்னேற்றமும் மற்றவர்கள் உங்களின் மீது நம்பிக்கையையும் பெறச் செய்யும்.
 
ராசியில் சந்திரன் உச்சம் பெறுவது அரசியலில் நன்மதிப்பை பெறுவதுடன் ஏளனமாக பேசியவர்கள் உங்களை இரு கரம் கூப்பி வரவேற்பது ஆச்சரியமாக இருக்கும். தனி மனித சுதந்திரத்தை வரவேற்பீர்கள். பொது நலனில் அக்கறை கொண்டு செயல்படு வீர்கள். நிர்கதியாக இருந்து ஆதரவற்றவருக்கு உதவி செய்வீர்கள். ஏழாம் அதிபதி செவ்வாய் நீசம் பெற்று குருவுடன் இணைவு பெறுவது கப்பல் துறையின் வேலை தேடுபவருக்கு நல்ல வாய்ப்பு அமையும். உச்ச குரு உயர்வை தருவார். 
 
பசியோடு இருப்பவருக்கு அன்னமிட்டு வர தாயார் உடல் நலன் விரைவில் குணம் தரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் இருக்க முன்னோர்களுக்கு திதி, சிரார்த்தம் செய்து பித்ருகளின் நல்லாசியை பெறுவீர்கள். தீர்த்த யாத்திரை நதி நீராடல் போன்றவை பயனுள்ளதாக அமையும். ஆறாமிடத்தில் புதனுடன் ராசிநாதன் இணைவு பெறுவது உயர் கல்வி தடை நீங்கி நன் மதிப்பைப் பெறுவீர்கள். 
 
குறுகிய கால தொழில் செய்து வருபவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்து இருப்பது பெரிய முதலீடு செய்து தொழில் செய்பவருக்கு வியாபாரம் சற்று மந்த நிலையில் இருக்கும். நீங்கள் சில நேரம் என்ன செய்வது? என்று அறியாமல் இருப்பீர்கள். லாபஸ்தானத்தில் சனி பலமிழந்து இருப்பதால் வருமானம் சற்று குறைவாக தான் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, ஆரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வெள்ளி, திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
16-10-2026 வெள்ளி காலை 07.22 மணி முதல் 18-10-2026 ஞாயிறு இரவு 07.03 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றி வெள்ளை நிற பூ வைத்து புளி அன்னம் நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்.