அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - மிதுனம்
சுறுசுறுப்பாக எல்லா காரியத்தையும் சிறப்பாக செய்யும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வை இடுவது தொழிலில் நல்ல வருமானத்தை பெறுவீர்கள். தொடர்ந்து எதிர்பார்த்த நல்ல பலன்களையும் பெறுவீர்கள். உறுதியான முடிவுகளை எடுத்து செயல் திறன் பெறுவீர்கள்.
தனஸ்தானத்தில் லாபாதிபதி செவ்வாய் நீசம் பெற்று உச்ச குருவுடன் இணைவு பெறுவதும் நீசம் பெற்ற ராசி அதிபதி சந்திரன் உச்சம் பெறுவதும் நீசபங்கம் பெற்று செவ்வாய் பலம் பெறுவதால் பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள். உச்ச குருவின் பார்வை மறைவு ஸ்தானங்களில் அமைவது தடைபட்ட காரியங்களின் வளர்ச்சியை பெறுவீர்கள். பாதுகாப்பு துறையில் பணி செய்பவருக்கு வெகுமதியும், பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். மூன்றில் கேது அமர்ந்து ராசியை பார்வை இடுவது மனவலிமையும் காரியத்தில் நுணுக்கமும் அறிந்து செயல்படுவீர்கள்.
சுகஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது தொழில் வளர்ச்சிக்கும் உத்தியோகத்திற்கும் வளர்ச்சியை பெற்றுத் தரும். பணியில் முன் விரோதம் காரணமாக சிலரின் மறைமுக தாக்குதல் ஏற்பட காரணமாக இருப்பீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதனும் சுக்கிரனும் இணைவு பெறுவது காதலை வெளிபடுத்த நினைப்பவருக்கு நல்ல சந்தர்ப்பம் அமையும். இசை, கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி மேன்மை அடைவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வெளிநாட்டு கனவு நிறைவேறும். மனதில் தெளிவு பிறக்கும். தொழில் ஸ்தானத்தில் சனி வக்கிரம் அடைந்து இருப்பது தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வரவுக்குள் செலவு செய்து பணத்தை சேமித்து கொள்வீர்கள். அமைதியான சூழ்நிலையில், வாழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, ஆரஞ்சு, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
18-10-2026 ஞாயிறு இரவு 07.04 முதல் 21-10-2026 புதன் இரவு 10.24 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடுகள் செய்து நல்லெண்ணெய் தீபமேற்றி எள் கலந்த சாதம் செய்து நைவேத்தியம் வைக்க நீங்கள் நினைத்த காரியம் வெற்றியை தரும்.
















