அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - மீனம்

அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - மீனம்

எதையாவது சாதிக்கவேண்டும் என எண்ணி செயல்படும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து குரு பார்வை பெறுவது மிக சிறப்பான பலனாக அமையும். குரு பார்வை பெறும் வரையில் சனியின் தாக்கம் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. உங்களின் அனைத்து விதமான முயற்சிகளும் முன்னேற்றமான காலமாக அமையும். கொடுத்த இடத்தில் சற்று தாமதமாக பணம் வரும்.
 
உங்களின் ராசியில் ஜென்ம சனியாக அமர்ந்த சனி வக்ரம் பெறுவது உடல்நலனின் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவதிபட வேண்டியதிருக்கும்.. குடும்பத்தில் மன அமைதியுடன் நல்ல பலனையும் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளுக்கு பக்க பலமாக சந்திரன் அமைந்து நன்மை தருவார். தனஸ்தானாதிபதி செவ்வாய்  நீசம் பெற்று உங்களின் லாபஸ்தானத்தை பார்வை இடுவது நல்ல முன்னேற்றமாக அமையும். திடமான நம்பிக்கையோடு ஒவ்வொரு காரியமும் பார்த்து பார்த்து செய்வீர்கள். 
 
விளையாட்டு துறையில் ஒரு படி மேலே சென்று வளர்ச்சியை அடைவீர்கள்.  ராசிநாதன் ஐந்தாமிடத்தில் குரு உச்சம் பெற்று லாபஸ்தானத்தையும், ராசியையும் பார்வை இடுவது தொழில் நல்ல லாபம் பெறுவீர்கள். குருவின் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் அமைவது ஆன்மீக பயணம் சென்று வருவதும், தீர்த்த யாத்திரை சென்று வருவதும், மகான்களின் ஆசீர்வாதம் பெறுவதும்.. குரு மார்களின் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
 
ஆறாமிடமான சூரியன் வீட்டில் கேது அமர்ந்து இருப்பது மறைமுகமான எதிரிகளின் தொல்லைகள் வந்து சேரும். பல வருடம் கூட்டாக தொழில் செய்பவர்கள் உங்களை மிட்டும் தோனியில் பேசுவது மனதிற்கு வேதனையைத் தரும். சூரியன் களத்திர ஸ்தானத்தில் அமர்வது கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். விட்டு கொடுக்காமல் பேசுவது… பிடிவாதமாக இருப்பதையும்,,, தவிர்ப்பது நல்லது. 
 
கூட்டுத் தொழில் பிரச்சனை வந்து பங்குதாரரிடம் வாக்குவாதம்  செய்ய வேண்டிவரும். எட்டாமிடமான மறைவு ஸ்தானத்தில் புதனுடன் சுக்கிரன் இணைவு பெறுவது தனஸ்தானத்தையும் இருவரும் பார்ப்பது வருமானம் வரும். சிலருக்கு அதனை நேரடியாக அனுபவிக்க முடியாமல் போகும். தடைபட்ட காரியங்களை எவ்வளவு முயற்சி செய்தாலும் காரிய தடை வந்து செயல்பட முடியாமல் போகும் வாய்ப்பு அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், ஆரஞ்சு, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
11-10-2026 ஞாயிறு பகல் 11.07 முதல் 13-10-2026 செவ்வாய் இரவு 08.15 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு ராகு காலத்தில் பைரவருக்கு சிவப்பு திரி போட்டு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு முந்திரி பருப்பு 11 ஐ மாலையாக கட்டி அணிவித்து உங்களின் வேண்டுதலை சொல்லிவர, விரைவில் நன்மை நடக்கும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554