அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - கடகம்

அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - கடகம்

மன உறுதியுடன் செயல்களை தவறாமல் செய்யும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரன் உச்சம் பெறுவதும். ராசியில் குரு உச்சம் பெற்று அமர்வதும் உங்களின் வளர்ச்சி படிப்படியாக அமையும். நினைத்ததை விரைவில் அடைவீர்கள். கடந்த கால தளர்ச்சி நிலை மாறி நன்மை பெறுவீர்கள். தாயார் வழி சொந்தங்களின் உதவியை பெறுவீர்கள்.
 
ராசியில் செவ்வாய் நீசம் பெற்றாலும் ராசிநாதன் சந்திரன் உச்சம் பெறுவதால் செவ்வாய் நீச பங்க ராஜயோகம் பெறுவது எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்களை பெறுவீர்கள். உங்களை மதித்து நடப்பவர்களுக்கு நீங்கள் அனைத்து உதவிகளையும் செய்வீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்க மாட்டீர்கள். தடுமாற்றமான நிலை மாறி வளர்ச்சிக்கு வழியாக அமையும். உச்ச குருவினால் பார்க்கும் இடங்கள் சிறப்பாக அமையும். 
 
தனஸ்தானத்தில் கேது அமர்வது சிறிது காரிய தடை இருந்தாலும் மனதில் தளர்ச்சி அடையாமல் செயல்படுவீர்கள். படபடப்பாக இருந்த பல காரியம் நன்மையை பெறும். மூன்றாமிட சூரியன் உங்களின் முயற்சிகளுக்கு பக்க பலமாக அமையும். தைரியத்துடன் எந்த காரியத்தையும் செய்வீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் எதையும் விட்டு கொடுக்காமல் இருப்பீர்கள். 
 
சுகஸ்தானத்தில் சுக்கிரனுடன் புதன் அமர்வது ஆற்றலும் ஆக்க பூர்வமான செயல்களிலும் உங்களை தயார் செய்து கொள்வீர்கள். அட்டம ராகு தடைகளை தருவார். செயல்களில் தாமதம் உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தில் சனி பலம் இழந்து இருந்தாலும் குருவின் பார்வையால் சனியின் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. சில வித எதிர்பார்ப்புகள் தடைபட்டாலும் அதனை எதிர்கொண்டு செயல்படுத்துவீர்கள். சுய முயற்சி நன்மையை தரும். ராசிநாதன் சந்திரனின் மூலம் பொருளாதார வளர்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, ஆரஞ்சு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
திங்கள், செவ்வாய், வியாழன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
21-10-2026 புதன் அதிகாலை 05.46 முதல் 23-10-2026 வெள்ளி பகல் 02.03 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி எள் கலந்த அன்னம் வைத்து காகத்திற்கு வைத்து வேண்டிக் கொள்ள சகல விதமான காரியமும் வெற்றியை தரும்.