நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - சிம்மம்
சிறந்த நிர்வாக திறன் கொண்டு செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் முற்பகுதியில் நீசம் பெற்று பிற்பகுதி பலம் பெற்றும் இருப்பதும் குரு பார்வை பிற்பகுதியில் ராசிநாதனுக்கு அமைவது உங்களின் செயல்திறனை மேம்படுத்தும் உங்களின் ராசிக்கு அட்டம குருவாகி பனிரெண்டில் மறைவு பெறுவது ராஜயோக நற்பலன்களை பெற்று தரும். நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்த மனபலமும், உடல் பலமும் பெறுவீர்கள்.
உங்களின் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரன் தனஸ்தானத்தில் அமர்வது உங்களின் பொருளாதார வளம் பெற செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதை செய்தாலும் அது விரைவில் நடக்க ஏற்பாடுகளும் அமையும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றியை தரும். அரசியலிலும், வெளி உலக நட்பு வட்டங்களிலும் உங்களின் செல்வாக்கு உயரும். புதிய திட்டங்களும் நல்ல வசதிகளையும், வாய்ப்புகளையும் பெருமிதத்துடன் பெறுவீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமான வளர்ச்சி பெற்று தரும். உத்தியோகம் பார்ப்பவரும் மேலதிகாரிகளின் உதவியும், நட்பும் பெறும் பலமாக அமையும். சரியான வளர்ச்சிக்கு வழி கிடைக்கும். தனித்தன்மையுடன் படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்க உதவிகள் கிடைக்கும். இதுவரை இந்த நிறுவனத்தைவிட பெரிய நிறுவனத்தின் மூலம் கலை நிகழ்ச்சி கிடைக்கப் பெற்று வளம் பெறுவீர்கள். யோகாதிபதி செல்வாய்க்கு குரு பார்வை பெறுவதும் மங்கள காரியங்களின் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். சனியுடன் ராகு சந்திரன் சேர்க்க உங்களின் நீண்ட நாட்கள் வராத பணம் இனி வந்து சேரும். கொடுத்த இடத்தில் பொருள் வந்து சேரும் பூர்வீக சொத்து பிரச்சனை பேசி தீர்க்க வாய்ப்புகள் அமையும். தொழில் செய்பவருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஜென்ம கேது பதவியின் உயர்வு பெற உதவிகளை செய்து தருவார்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
02-11-2025 ஞாயிறு காலை 08.20 முதல் 04-11-2025 செவ்வாய் பகல் 11.44 மணி வரையும்.
29-11-2025 சனி மாலை 04.17 முதல் 01-12-2025 திங்கள் இரவு 07.53 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை காலை 09.00 - 10.30 ராகு காலத்தில் பைரவருக்கு ஐந்து நல்லெண்ணெய் தீபமேற்றி அரளி பூ மாலையும் தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் அனுகூலமாக அமையும்.

















