நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - ரிஷபம்
எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதும் புதன், சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் பெறுவதும். உங்களின் தொடர் முயற்சிக்கு நல்ல பலன் தரும். களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் ராசியை பார்வை இடுவதும் நினைத்ததை சாதிக்கும் வலிமை கிட்டும்.
உங்களின் தொழில் ஸ்தானத்தில் சனியுடன் ராகு சந்திரன் இணைவு பெறுவது புதிய தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு எதிலும் தாமதம் உண்டாகும். தசை, புத்தி பலம் உள்ளவர்களுக்கு யோக பலன்கள் கிட்டும். முக்கிய ஆலோசனைகள் உங்களின் தொழிலுக்கும் உத்தியோகத்திற்கும் நல்ல பலனை பெற்று தரும். சுகஸ்தானத்தில் கேது அமர்வது தாயாரின் உடல் நலனை பாதிக்கும். உஷ்ணம் சார்ந்த உபாதைகளை தாயார் அனுபவிக்க வேண்டிவரும். சாதாரண விடயத்திற்கு கூட சில நேரம் கடுமையாக கஷ்ட பட வேண்டி வரும்.
புதிய திட்டங்களை டிசம்பர் வரை தள்ளி போடுவது நல்லது. அரசியலில் உங்களின் செல்வாக்கை தக்க வைத்து கொள்வீர்கள். எதற்கு அஞ்சாமல் எடுத்த காரியத்தை துணிவுடன் செய்து வளம் பெறுவீர்கள். கருத்து வேறுபாடுகளுடன் இருந்த உறவினர்கள் மீண்டும் நற்காரியங்களில் இணையும் வாய்ப்பை பெறுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட நினைத்தாலும் உடல்நலனில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். கலைத்துறையினர் தங்கள் விரும்பிய நிறுவனத்தில் இணைந்து செயல்படுவீர்கள். பெண்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். தேவையான பண பலம் உங்களுக்குப் பெறுவீர்கள். துரிதமான உங்களின் பயணம் சில நேரம் நன்மையே தரும். குரு அதிசார பலன் மூலம் உங்களின் முயற்சிக்கு நன்மையை தரும். மாணவர்களின் கல்வி திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், ஓரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
22-11-2025 சனி 04.47 முதல் 25-11-2025 செவ்வாய் அதிகாலை 03.01 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் சிவப்பு குங்குமத்தால் சுக்கிர ஓரையில் (காலை - 06 - 07, மதியம் - 01 - 02, இரவு - 08 - 09) மகாலெட்சுமிக்கு அர்ச்சனை செய்து தாமரை மலர் வைத்து வேண்டிக் கொள்ள பொருளாதார வளர்ச்சி சிறப்பாக அமையும்.

















