நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மேஷம்

நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மேஷம்

வாழ்க்கைக்கு தேவதையானதை சுயமாக தெரிவு செய்யும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு செவ்வாய் தனஸ்தானத்தை பார்வை இடுவதும் தொழில் ஸ்தானம், விரையஸ்தானத்தையும் ராசிநாதன் செவ்வாயையும் குரு பார்வை இடுவதால் எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்கள் தேடி வரும். நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்திக் கொள்ள பெரும் முயற்சிகள் எடுப்பீர்கள்.
 
உங்களின் களத்திர ஸ்தானத்தில் சூரியன் அமர்வது சிலருக்கு நீண்ட நாட்களாக சொல்லத் தயங்கிய காதலை வெளிபடுத்துவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களின் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைக்கும் லாபஸ்தானத்தில் ராகுவுடன் சனி இணைவு பெற்று அமர்வது உங்களின் தொழிலில் சற்று முன்னேற்றம் உண்டாகும். சரியான பாதையை தெரிவு செய்வது உங்களின் வளர்ச்சிக்கு நல்ல உறுதுணையாக அமையும்.
 
கணவன் மனைவி ஒற்றுமை இருந்தாலும் சற்று சலசலப்பு இருக்கும். புத்திரர்களின் வேலை பற்றி சில முயற்சிகள் எடுக்க வேண்டி வரும். சரியான தொழில் அமைத்து கொள்வதில் இருந்த சிக்கல்கள் விலகும். சகோதரர்களின் ஒற்றுமை சில நேரம் நன்மையை தரும். விளையாட்டு துறையில் இருக்கும் அன்பர்களுக்கு, புதிய பயிற்சி நல்ல பலனை தரும். வெளியூர், வெளிநாடு செல்பவர்கள் சில மாதம் தாமதமாகும். கடன் பெற்றவர் அதனை அடைக்க சில கஷ்டங்களை அடைய வேண்டி வரும். நல்ல நண்பர்களிடம் பழகுவது நல்லது ஆசை வார்த்தை பேசுவர்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, வடக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
திங்கள், செவ்வாய், புதன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
20-11-2025 வியாழன் அதிகாலை 05.11 முதல் 22-11-2025 சனி மாலை 04.46 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழன் காலை 06.00 - 07.00 வரை விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமும் அருகு மாலை கட்டி போட்டு வேண்டிக் கொள்ள சகல காரியம் சிறப்பாக இயங்கும்.