நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மகரம்

நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மகரம்

மனதில் நினைத்ததை செயலில் காட்டும் திறம் கொண்ட மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு அதிசார குருவின் பார்வை பெறுவதும் ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்வதும். செவ்வாய் லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதும் மேலும் பலம் பெற்று நற்பலன்களை பெற்று தரும். சரியான வளர்ச்சி பாதைகளை நோக்கி பயணம் செய்வீர்கள். இனி உங்களுக்கு வெற்றியை நோக்கியே இருக்கும். பிறருக்கு உதவி செய்வதை கொள்கையாக கொண்டு விளங்குவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்தும் ராசியை குரு அதிசாரமாக பார்வையிடுவதும் உங்களின் வளர்ச்சி உறுதுணையாக அமையும். உதவி கரங்களால் அனைவரையும் அரவனைத்துச் செல்லும் பண்பு கொண்டவர்கள். நீங்கள் சமயோஜித செயல்களால் எதையும் செய்து பிரச்சனையின்றி தற்காத்து கொள்வீர்கள். மன அமைதியையும் உடல் வலிமையையும் எப்பொழுதும் பேணி பாதுகாத்துக் கொள்வீர்கள். உங்களின் தொழில் ஸ்தானாதிபதியும் யோகாதிபதியுமான சுக்கிரன் நீசம் பெற்று இருப்பதாலும், புதன் பரிவர்த்தனை பெற்று இருப்பதாலும் உங்களின் தொழிலில் சற்று பொருளாதார நெருக்கடி வந்தாலும் லாபாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கலைதுறையினர் வெற்றியில் பயணமாக வெளி இடங்களுக்கு சென்று வருவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பால் உங்களின் எதிர்பாராத வளர்ச்சி மேன்மையை தரும். சிலருக்கு தசை புத்தி பலம் பெற்று இருந்தால் அரசு பணியில் வேலை வாய்ப்பு அமையும். உங்களின் எதிர்கால வளர்ச்சி இனி யாராலும் தடுக்க முடியாது சனி கொடுத்தால் யார் தடுப்பார். எதிரிக்கு கூட உதவி செய்யும் குணம் கொண்ட உங்களுக்கு இனி ஒரு தீங்கும் இல்லை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென் கிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
சனி, செவ்வாய், புதன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
12-11-2025 புதன் இரவு 12.52 முதல் 15-11-2025 சனி காலை 08.07 மணிவரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் பைரவருக்கு அரளி பூ மாலையும், மூன்று நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி பைரவர் காயத்ரி சொல்லி வேண்டிக் கொள்ள சகல காரியமும் மேன்மையும், வளம் பெருகும்.