நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - கும்பம்
உயர்ந்த பின்பும், உன்னதமான மன நிலையும் கொண்டு விளங்கும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்ந்தும் ராகு இணைவு பெறுவதும் போட்டி, பொறாமைகளில் இருந்து விடுபடாமல் யுக்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். முக்கிய செயல்களில் நினைத்தபடி எதையும் செயல்படுத்த தாமதம் ஆனாலும் ராசிநாதன் உங்களின் வளர்ச்சி உறுதுணையாக உதவிகளை செய்வார். அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் செல்வாக்கு பஞ்சம் வராமல் காத்து மேன்மையை அடைய செய்வார்.
உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று ராசியை பார்ப்பதும் சனியை செவ்வாய் பார்வை இடுவதால் சிலருக்கு எதையும் எதிர்த்து போராடும் மனவலிமை , மருத்துவ துறையினருக்கு வருமானம் பெருகும். நோயாளிகளின் எண்ணிக்கையை பெருக்க ஆதரவு கிடைக்கும். விளையாட்டு துறையில் உச்சகட்ட நிலையை எட்டுவீர்கள். எதையும் சவாலாகவும், எம்மால் முடியும் என்ற வைராக்கியமும் உண்டாகும். ஆறாமிடத்தில் அதிசார குரு புதிய கடன்படும் நிலை உருவாக்குவார். அத்தியாவசிய விடயங்களை தவிர வேறு எதற்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் செய்ய உடன் இருப்பவரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி கடன் வாங்கி தொழில் செய்தால் உங்களின் முதலீடுகளை இழக்க வேண்டி வரும். கலைத்துறையினரின் வளர்ச்சி சற்று பாதிப்பை தந்தாலும் உங்களின் வழக்கமான நிகழ்வுகளை தக்க வைத்துக் கொள்வீர்கள். புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளி போடுவது நல்லது. தர்ம காரியத்திற்கு உதவி செய்வதும் மருத்துவத்திற்கு பண உதவி செய்வதும் கோவில்களுக்கு கட்டிடநிதி தருவதும் உங்களின் தவிர்க்க முடியாத துன்பத்திலிருந்து உங்களை விடுவிக்கும். அரசியலில் உடன் இருப்பவர் மூலமே உங்களுக்கு தொல்லைகள் வரும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவைக்கு பண உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
15-11-2025 சனி காலை 08.08 முதல் 17-11-2025 திங்கள் மாலை 05.49 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடும், நவகிரக வழிபாடும் செய்து 27 மிளகு வெள்ளை துணியில் கட்டி நல்லெண்ணெய் தீபம் பைரவருக்கு ஏற்றி வேண்டிக் கொண்டு தயிர் அன்னம் வைத்து படைக்க சகல காரிய தடையும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.

















