நவம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - கடகம்
விரும்பியதை விரும்பியபடி செயல்படுத்தி காட்டும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு பலம் பெற்று அமைவதும் ராசிநாதன் அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து தனாதிபதி வீட்டை பார்வை இடுவதும் எதையும் சலனமின்றி செய்வதில் மிகவும் கெட்டிகாரதனத்தை அமைத்து தர சகல காரியமும் மேன்மை அடைய உங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை உயர்வு பெறும்.
தனாதிபதி சூரியன் நீசமானதால் பணவரவு தடைபடும் என்றாலும் கூடுதல் பணி செய்து எல்லா வித பிரச்சனைகளை சரி செய்து கொள்வீர்கள். குருவின் பார்வை பெறும் இடங்கள் சிறப்பாக அமையும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று குரு பார்வையும் பெறுவதால் பூர்வீக சொத்துகள். சார்ந்த விடயம் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். குறைந்தபட்சமான முதலீடுகளை தொழில் செய்பவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். களத்திர ஸ்தானத்தை பார்ப்பது திருமணம் முன்பு பார்த்த பெண் பேசி முடிக்கும் வாய்ப்பு சிலருக்கு அமையும். திருமண திகதிகள் நிச்சயமாகும்.
அட்டம சனியுடன் ராசிநாதன் சேர்ந்திருப்பது கொடுத்த இடத்தில் பணம் வந்து சேராமல் போவதும் கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நடக்க முடியாமல் போவதும் உண்டாகும். முடிந்த வரை புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் தங்களின் வாய்ப்புகளை பகிர்ந்து கொண்டு கூட்டு முயற்சியின் நன்மையை பெறுவீர்கள். எதிலும் உங்களின் கவனம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறுதியான மனநிலையே உங்களின் முழு வெற்றி என்பதால் எதிலும் பின் வாங்காமல் தைரியமுடன் செயல்படுவதன் மூலம் நினைத்ததை அடைய வழி கிடைக்கும். அரசியலில் உடன் இருந்தவர்கள் முதுகில் குத்துவார்கள் என்பதால் கவனமுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
27-11-2025 வியாழன் காலை 10.50 மணி முதல் 29-11-2025 சனி மாலை 04.10 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் பைரவருக்கு எட்டு நல்லெண்ணெய் தீபமும் எள் கலந்த அன்னம் அரளி பூ மாலை சாற்றி வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் வெற்றியை தரும்.

















