மே மாத ராசி பலன்கள் 2026 - விருச்சிகம்

மே மாத ராசி பலன்கள் 2026 - விருச்சிகம்

தனக்கென்று கொள்கையை வகுத்து அதன் வழியே நடக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வை இடுவது மிக சிறப்பான நற்பலன்களை தருவார். உங்களின் யோகாதிபதியும் லாப ஸ்தானத்தில் அமர்வது நல்ல பொருளாதாரத்தில் வளர்ச்சியை பெறுவீர்கள். கடுமையான சோதனை காலங்கள் இனி வரும் மாதம் முதல் விலகி சிறப்பான காரிய அனுகூலம் கிடைக்கும்.
 
சுகஸ்தானத்தில் ராகு அமர்வது வீட்டில் வயதானவர்களுக்கு உடல்நல குறைவு வர வாய்ப்பு அமையும். குரு பார்வை பெறுவது கண்ட தோசமாக இல்லாமல் மருத்துவ செலவு உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி / செவ்வாய் சேர்க்கை குலதெய்வ வழிபாடு செய்தல் குலதெய்வம் தெரியாதவர்கள். அதனை அறியும் வாய்ப்பு அமையும். புதிய பாதையை தெரிவு செய்து பயணம் செய்வீர்கள். ஒரு தலை காதல் சிலருக்கு இருக்கும். தன் காதலை சொல்ல தயங்கி கொண்டு இருப்பீர்கள். காரணமின்றி யாரையும் கோபித்து கொள்ள மாட்டீர்கள். ஆறாமிடத்தில் சூரியன் உச்சம் பெறுவது செய்யும் தொழிலிலும், உத்தியோகத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். எதிரி என்று இதுவரை இருந்தவர்கள் உங்களிடமிருந்து விலகி கொள்வார்கள்.
 
அரசியலிலும், பொது வாழ்விலும் மற்றவருக்கு உதவி செய்வதை கடமையாக நினைப்பீர்கள். தொழிற்சங்க பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். எதிரிகளிடம் சுமூகமான உறவுகளை வைத்து கொள்வீர்கள். களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று ராசியை பார்வை இடுவது நல்ல சூழ்நிலையாக அமையும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குதல் புத்தாiடைகள், வெள்ளி கொலுசு மாற்றி புதுசு வாங்குவது போன்ற பலன் உண்டாக்கும். அதிக செலவுகள் செய்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்க பெறுவீர்கள். உழைத்து முன்னேற வேண்டுமென்று எண்ணுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு இரண்டு, ஐந்துக்குரிய குரு பகவான் அட்டம ஸ்தானத்தில் அமர்வது சறு்று கஷ்டங்களாக இருந்தாலும்… தங்க நகைகள் தங்காமல் போவது களவு போவது போன்ற செயல்கள் நடக்கும் என்றாலும் தனஸ்தானத்தை பார்வை இடுவது பணவரவுகளுக்கு தடை இருக்காது. எதையும் தாங்கும் இதயம் கொண்டு விளங்குவீர்கள். தனி மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கு சமுதாய சீர்திருத்தவாதி யாக சிலர் செயல்படுவீர்கள். விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவீர்கள். விவசாயத்தில் கவனம் செலுத்தி விளைச்சலை பெருக்கும் வழி காண்பீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை உங்களை வளம் பெற செய்யும் கடமை தவறாத பாதுகாப்பு துறை பணிகளில் சிறப்பு விருதுகளுக்கு பரிந்துரை செய்யபட்டு விழாவில் அதை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
ஆரஞ்சு, மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
செவ்வாய், வியாழன், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
18-05-2026 திஙக்ள இரவு 01.33 முதல் 21-05-2026 வியாழன் அதிகாலை 04.07 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமைகளில் தெட்சிணாமூர்த்தியை வணங்கி ஐந்து நெய் தீபமேற்றி கொண்டை கடலை சுண்டல் வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லிவர அனைத்து காரியங்கள் சிறப்பாக நடக்கும்.