மே மாத ராசி பலன்கள் 2026 - சிம்மம்
துணிச்சலுடன் எடுத்த காரியத்தை செயல்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமைவது தன, லாபாதிபதி புதனுடன் சம்மந்தம் பெறுவதும் தொழிலிலும் உத்தியோகத்திலும் நன்மதிப்பை பெறுவீர்கள். எடுத்த காரியத்தை வெகு விரைவில் முடித்துக் கொள்வீர்கள்.
பாகுபாடுகளின்றி செயல்படும் உங்களின் செல்வாக்கு உயரும். எதையும் கணிக்கும் முன்பே உங்களின் எண்ணம் போல் சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். சொந்த காலில் நிற்க வேண்டுமென்று ஆசைபடுவீர்கள். தனி திறமையுடன் செயல் படுவீர்கள். காரியத்தை கண் கொண்டு கவனித்து செயல்படுவீர்கள். அரசியல்வாதி களுக்கு சாதகமான காலமாக அமையும். எந்த செயலாக இருந்தாலும் நிதானமாக செயல்படவே விரும்புவீர்கள். பொது வாழ்வில் உங்களை நம்பி வந்தவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வீர்கள். ஆதரவற்றவர்களுக்கும் உடல்நல குறைபாடு இருப்பவருக்கும் உதவி செய்வீர்கள். நீங்கள் செய்யும் தர்மம் உங்களுக்கு பிற்காலத்தில் நன்மையாக அமையும்.
அட்டம சனியுடன் செவ்வாய் இணைவு பெறுவதால் யாரிடமும் தேவையற்ற சச்சரவுகளை வைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களின் பணியை மட்டும் பார்த்துக் கொண்டு பிறரின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. அட்டம சனி பெரிய பாதிப்பை தராது என்றாலும் செவ்வாய் சேர்க்கை நல்லதல்ல என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. பால் வளம், விவசாயம், பண்ணை தொழில் சிறப்பாக இருக்கும்.
தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சிலருக்கு கஷ்டமான சூழ்நிலை உண்டாகும். கடமையை செய்து பலனை பெறுவீர்கள். ஆன்மீக தொடர்புகளால் நீங்கள் எதிர்பார்த்த வசதிகளை பெறுவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு வளர்ச்சியை பெற்று தரும். கலை துறையினரின் சேவை சிறப்பாக அமையும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பணபுழக்கம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
12-05-2026 செவ்வாய் மாலை 03.29 முதல் 14-05-2026 வியாழன் இரவு 08.05 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு 27 மிளகு சிவப்பு துணியில் கட்டி மூன்று நல்லெண்ணெய் தீபம் (3 x 9 =27) ஏற்றி தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் கூலமாகும்.
















