மே மாத ராசி பலன்கள் 2026 - மிதுனம்
சவால்களை சாதனைகளாக்கும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களின் வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரும். ஜென்ம குரு பார்வை செய்யுமிடங்கள் சிறப்பான பலன்களை கொடுப்பார். மூன்றாமிட கேது ராசியை பார்வை இடுவது தைரியமும் துணிச்சலும் உண்டாகும்.
ஜென்ம குரு உங்களின் எதிர்கால நலன்களில் அக்கறை கொள்ளும் வாய்ப்பினை தருவார். எடுத்த காரியத்தை முன்னின்று நடத்தி கொடுக்கும் வலிமையை தருவார். மன அழுத்தம் அடிக்கடி வந்தாலும் உங்களின் கடமைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளை குறைத்து கொள்வீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்ப்பது எந்தவித தொழில் செய்தாலும் அதில் முழு அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுவீர்கள். திருமண காரியங்களும், சுபகாரியமும் உங்களின் வீட்டில் நடக்கும். கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். எதையும் வருமுன் காத்து வளம் பெறுவீர்கள்.
உங்களின் தொழில் ஸ்தானாதிபதி குரு வீட்டில் சனி செவ்வாய் இணைவு பெற்று செவ்வாய் ராசியையும், குருவையும், பார்வை இடுவதால் தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். எதையும் கண்ணும் கருத்துமாய் செய்யும் உங்களுக்கு தொழிலில் போராடி ஜெயிக்கும் சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் தீரும். உங்களின் ஜாதகத்தில் இதுவரை காணாத தோசத்தை நிவர்த்தி செய்யும் வாய்ப்பு அமையும். தர்ம காரியம் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு அலைச்சல் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். சுறுசுறுப்பாக இருக்கும். உங்களின் வளர்ச்சி பெருமை சேர்க்கும் படியாக அமையும். அரசியலில் நல்ல ஆலோசகராக இருப்பீர்கள். கணணி பிரிவில் ஆர்வமுள்ளவர்களுக்கு புதிய யுக்திகளையும், கற்பனை வளமும் உண்டாகும். ஆடிட்டர் பணியில் இருப்பவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும். சொந்த முயற்சியில் வாழ்வில் முன்னேறி செல்லும் நிலையை பெறுவீர்கள். சதுரங்கம், ரொபாட் அமைப்பு சிறப்பாக அமையும். தங்க நகை வாங்கும் வாய்ப்பு சிலருக்கு அமையும். நீங்கள் இதுவரை எதிர்பாராத பல காரியம் திடீரென்று முடியும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
07-05-2026 வியாழன் இரவு 12.17 முதல் 10-05-2026 ஞாயிறு காலை 08.37 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
பைரவருக்கு ஞாயிறு மாலை ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு முந்திரி பருப்பு ஒன்பது (9) மாலை கட்டி போட்டு வேண்டிக் கொள்ள நன்மைகள் மேலோங்கும்.
















