மே மாத ராசி பலன்கள் 2026 - தனுசு

மே மாத ராசி பலன்கள் 2026 - தனுசு

யாரின் உதவியுமின்றி தானே முன்னேற நினைக்கும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பார்வை பெறுவது சிறப்பான பலன்களை பெற்று தரும். ஏழாமிடத்தில் குரு அமர்வது திருமண பந்தம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். யோகாதிபதி சூரியன் உச்சம் பெற்று லாப ஸ்தானத்தை பார்வை இடுவது இன்னும் சிறப்பாக அமையும்.
 
இம்மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே அமையும். கொடுக்கல் வாங்கலில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதை செய்தாலும் அதற்கு முக்கியத்துவம் கிடைக்கும். சாதுர்யமாக பேசி காரியத்தை நடத்திக் கொள்வீர்கள். புதிய திட்டங்களுக்கு வழி வகையை தேடுவீர்கள். பாதியில் நின்ற காரியம் இனி செயல்பட துவங்கும். வீண் விவாதத்தை விட்டு விட்டு ஆக்க பூர்வமான செயலில் இறங்கி உறுதியுடன் செயல்படுவீர்கள். அரசியலில் முக்கியத்துவம் பெறுவீர்கள். நல்ல ஆலோசகராகவும், காரிய அனுகூலமான செயல்களுக்கு உடன் இருந்து உதவிகளை செய்து வருவீர்கள். யாருக்கும் சிறிதும் துன்பம் வராமல் பார்த்து கொள்வீர்கள். உறவுகளிலும், நட்புகளிலும் உங்களின் பரிவும், அன்பும் பாராட்டும்படி அமையும்.
 
சுகஸ்தானத்தில் சனியுடன் செவ்வாய் சேர்க்கை உங்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். வாகனங்களில் செல்லும் போது கவனமுடன் செல்வது மிகவும் நல்லது. தாயாருக்கு உடல்நல குறைவு வர வாய்ப்பு அமையும். எதிரிகளிடமிருந்து படிப்படியாக விடுதலை பெறுவீர்கள். சரியான முயற்சிகளை எடுத்து செயல்களில் துரிதமான விடயங்களை செய்வீர்கள். யாருக்கு தீங்கு நினைக்காத உங்களுக்கு ஏதாவது இடையூறுகளை கொடுத்து கொண்டே இருப்பார்கள். முதலீடுகள் இல்லாத தொழிலை செய்பவர் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். குறை கண்டு படிப்பவர்களுக்கு நீங்கள் சரியான பதிலடி கொடுப்பீர்கள்.
 
ஆன்மீக தொண்டுகளில் ஆர்வம் இருந்தாலும் அதற்கு நேரம் இல்லை என்று தவிர்த்து விடுவீர்கள். சுறுசுறுப்பாக இயங்கி வந்தாலும் சில நேரம் சோர்வு உண்டாகும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியனுடன் தொழில் ஸ்தானாதிபதி இணைவு பெறுவது செய்யும் தொழிலில் மேன்மை அடையவும், உறுதி தன்மையுடன் செயல்படுவீர்கள். சமூக சேவைகளில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டிய நேரத்தில் உங்களுக்கு கிடைத்தே தீரும். சூரியன் அரசு சார்ந்த காரியங்களில் நற்பலன்களை பெற்று தருவார். அரசியலில் சாதகமான சூழ்நிலை உருவாகும். காரிய அனுகூலம் உண்டாகும். புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். கேது பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தீர்த்த யாத்திரை சென்று வரும் வாய்ப்பை தருவார். கமிசன் தொழிலில் சுமூகமான வருமானம் கிடைக்க பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், ஞாயிறு, புதன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
21-05-2026 வியாழன் அதிகாலை 04.08 முதல் 23-05-2026 சனி காலை 07.48 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி அருகம்புல் மாலை சாற்றி சர்க்கரை வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லிவர நினைத்த காரியம் கைகூடும் செய்யும் தொழில் விருத்தியை தரும்.