ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - கன்னி
அறிவாற்றலால் எந்த செயலையும் துணிவுடன் செய்யும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் புதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வது மிகவும் சிறப்பான பலனாக அமையும். கண்டக சனியை குரு பார்ப்பதால் கெடுபலன்கள் விட்டு விலகும். எந்த எதிர்ப்பும் வந்தாலும் அதனை எதிர் கொண்டு செயல்படும் வலிமையை பெறுவீர்கள். குடும்ப மகிழ்ச்சியில் முழு கவனம் செலுத்தி வளம் பெறுவீர்கள். பொது வாழ்விலும் அரசியலிலும் மிக சிறந்த நிர்வாக திறமையை ஏற்படுத்துவீர்கள். குறை சொல்லி பேர் வாங்குபவர்களை அடையாளபடுத்துவீர்கள்.
லாபாதிபதி சந்திரன் சுகஸ்தானத்தில் அமர்வதால் ராசிநாதனை பார்வை இடுவது தொழிலிலும், உத்தியோகத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளை குறைத்து கொள்வீர்கள். யார் பசியோடு வந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்குவீர்கள். தாயார் உடல் நலன் சிறப்பாக அமையம். நாட்பட்ட நோய்கள் குணமாகும். சமுதாயத்தில் இதுவரை மறைமுகமான எதிரிகள் உங்களை பாதித்த நிலை… இனி படிப்படியாக விலகிவிடும். உங்களின் தனிச்சையான எந்த முடிவும் உங்களுக்கு வெற்றியை பெற்று தரும்.
எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் நீங்கள் உங்கள் கடமையை செய்வீர்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் குடும்பத்தில் சிறு சண்டைகள் வந்தாலும் அது பெரிய அளவில் எந்த வித பாதிப்பையும் தராது. உறவுகளுக்கு மதிப்பை அறித்து வேறு எண்ணங்களுக்கு துணை போகாமல் அன்புடன் இருப்பீர்கள். நண்பர்களின் கூட்டு சில நேரம் நன்மையையும் சில நேரம் தீமையையும் தரும் என்பதால் உற்ற நண்பனாக இருந்தாலும் உங்களின் கொள்கையை விட்டு கொடுக்காமல் செயல்படுவீர்கள்.
அட்டமாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது உங்களுக்கு காரிய சித்தியை பெற்று தரும். சரியான நிலைபாடுகளை எடுப்பீர்கள். குறை சொல்லாதபடி செயல்பட்டு வளம் பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் புதனுடன் சூரியன் திக் பலம் பெற்று அமர்வது நல்ல வியாபார விருத்தியையும், பொருளாதார பெருக்கத்தையும் பெற்று தரும்.
கலைத்துறையின் காலம் சிறப்பாக அமையும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்படி பார்த்துக்கொள்வீர்கள். பாதகாதிபதி குரு பதினொன்றில் அமர்வது பொருளாதாரத்தில் மேன்மை அடைய செய்யும் கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி காண்பீர்கள். யாருக்கும் அடிபணிதல், வெறுப்பு காட்டுதல் போன்ற செயல்களை சொல்ல மாட்டீர்கள். மனிதாபிமான செயல்களை மிகவும் விரும்பி செய்வீர்கள். வெளியூர் வெளிநாடு செல்பவருக்கு இது நல்ல கால சுபிட்சமாக அமையும். தேவைக்கு பணப்புழக்கம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
08-07-2026 புதன் கிழமை பகல் 12.25 முதல் 10-07-2026 வெள்ளி மாலை 03.45 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும் எலுமிச்சை பழம் வைத்து சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள நீங்கள் எதிர்பாராத காரியம் விரைவில் நடக்கும்.
















