ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - கடகம்
அன்பால் எதையும் சாதித்து காட்டும் வல்லமை பெற்ற கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரன் ஆறாமிடத்தில் அமர்ந்து விரைய ஸ்தானத்தை பார்வை இடுவது எதிர்பாராத பொருளாதார பெருக்கத்தை பெற்று தருவார். உங்களின் யோகாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்து ராசிநாதனை பார்வை இடுவது தொழிலில் நல்ல வருமானம் கிடைக்க பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் முதலீடு இல்லாத தொழில்களில் நல்ல வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தொடர்புகள் மூலம்பெரிய மாற்றத்தை சந்திப்பீர்கள். இதுவரை சந்திக்காத நெருக்கடியான சூழ்நிலைகள் வரும்.
உங்களின் ராசியில் குருவுடன் சுக்கிரன் இணைவு பெறுவது சுக்கிரன் சுகஸ்தானாதிபதி என்பதால் புதிய வண்டி வாகனம் வாங்குவது உயர்தரமான வீடுகள் கட்டுதல் ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். எதையும் சாதிக்கும் மனவலிமையை பெறுவீர்கள். புதிய திட்டங்கள் அமுல்படுத்துதல். ஏற்கனவே தீர்மானம் செய்த காரியங்களை செயல்படுத்தல் போன்ற செயல்களை மேம்படுத்துவீர்கள். ராசியில் குரு உச்சம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதும் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் பார்வை பெறுவது சிறப்பான பலன்களை பெற்று தரும்.
எடுத்த காரியம் வெற்றியைத் தரும். மற்றவர்களுக்கு உதவி செய்வதை பாக்கியமாக கருதுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்காமல் உங்களின் கடமையை செய்வீர்கள். சிலருக்கு திருமண தடை நீங்கி, திருமணம் நடக்கும். மறுமணம் செய்ய விரும்புவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்க பெறுவீர்கள். தனஸ்தானத்தில் கேது அமர்ந்து பொருளாதாரத்தை பெருக்கி தருவார். கொடுத்த பணத்தை வாங்க பாடாத பாடுபட வேண்டி இருக்கும். தாயார் உடல்நலனில் கவனிக்க வேண்டிவரும். மேலதிகாரிகளிடம் இணக்கமான உறவுகளை கையாண்டு ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள்.
அட்டம ஸ்தானத்தில் ராகு அமர்ந்து சில நெருக்கடிகளை தருவார். வயதான தாத்தா, பாட்டிகளை நன்கு கவனித்துக் கொள்வது அவசியம். உங்களின் பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதும் குரு பார்வை பெறுவதும் கூட்டு முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சனி கொடுத்தால் யார் தடுப்பார் எல்லையே இல்லாத இடத்தில் கூட நீங்கள் ஒன்றை திட்டமிட்டு அதனை சிறப்பான நடத்தி கொடுப்பீர்கள்.
லாபஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் இருப்பது எந்த தொழிலாக இருந்தாலும் அதன் மூலம் கூடுதல் லாபம் பெறுவீர்கள். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப உங்களின் தொழில் மாறி கொண்டே வரும். மக்களின் விருப்பம் எதுவே அதுவே உங்களின் முதலீடாக இருக்கும். விரையஸ்தானத்தில் விரையாதிபதி புதன் அமர்ந்து ஆறாமிடத்தை பார்வை இடுவது செய்யும் தொழிலிலும் உத்தியோகத்தில் உங்களின் செவ்வாக்கு மென்மேலும் உயரும். பாதுகாப்பான முதலீடு உங்களுக்கு உடன் நல்ல பலனை பெற்று தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு,
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு. தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
03-07-2026 வெள்ளி இரவு 12.00 முதல் 06-07-2026 திங்கள் காலை 07.22 மணி வரையும்.
31-07-2026 வெள்ளி காலை 07.38 முதல் 02-08-2026 ஞாயிறு மாலை 03.14 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து சிவப்பு செந்தூரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி அனுமன் சாலிசா சொல்லி வேண்டி கொள்ள நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும். வளமாகவும் அமையும்.
















