ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - துலாம்
தனி திறமையுடன் எப்பொழுதும் செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆரம்பத்தில் பாக்கியஸ்தானத்தில் குரு அமர்வதும் ராசிநாதன் குரு வீட்டில் அமர்வதும் சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை வளப்படுத்தி தருவார்கள். மார்ச் மாதத்திலிருந்து சனி ஆறாமிடத்தில் அமர்வதும். குரு தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது அமைகிறது. நவம்பரில் கேது குருவும் இணைந்து யோக பலன்களை தருவார்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி வரும் 06.03.2026 முதல் சத்ரு ஸ்தானத்தில் சரியான வழியை தெரிவு செய்யவும். கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவிகளை செய்வார். எதிரிகளின் சூழ்ச்சியை உணர செய்து அதிலிருந்து தப்பிக்க உதவுவார். இனிவரும் குரு பெயர்ச்சி 26.05.2026 முதல் குரு தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று உங்களின் தொழிலில் முன்னேற்றம் பெற செய்வார். தனித்த குரு அவதியை தருவார் என்பதால் சிறிது காலம் சில கஷ்டங்களை பட்டாலும் பிற்கால சூழ்நிலை மாறும்.
ராகு சுகஸ்தானத்தில் அமர்வது தாயார் உடல் நலனில் காரணம் செலுத்த வேண்டி வரும். நவம்பர் மாத பெயர்ச்சிக்கு பின்பு கவனமுடன் இருப்பது நல்லது. கேது குருவுடன் இணையும் போது எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். நினைத்தபடி எல்லாம் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். காலத்திற்கு தகுந்த தொழிலில் முன்னேற்றங்கள் அடைவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் சிறப்பான வளர்ச்சியை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென் கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
6, 8, 9.
அதிர்ஷ்ட மாதம்:
ஜனவரி, ஜுன், செப்டம்பர், நவம்பர்.
பரிகாரங்கள்:
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து விளக்கு ஏற்றி புளி சாதம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் நன்மையை தரும். வியாழக் கிழமைகளில் குருவிற்கு ( தெட்சிணாமூர்த்தி)விளக்கு ஏற்றவும்.

















