குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - மீனம்

குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - மீனம்

தன்னை சுற்றி இருப்பவர்கள் நலம் பெற நினைக்கும் மீன ராசி வாசகர்களே!
 
இதுவரை மூன்றில் இருந்த ராசிநாதன் குரு இனிவரும் 11-05-2025 முதல் சுகஸ்தானத்தில் அமர்வது உங்களின் ராசிக்கு மறைவு ஸ்தானங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வை இடுவது தடைபட்ட காரியம் செயல்படதுவங்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு அமர்வது கூட்டு தொழிலில் சிலருக்கு பிரச்சனை உண்டாகும். பேசுவது போல நடக்காமல் உடன் இருந்து சிலர் மாறுவது மனவருத்தத்தை தரும். உடல் நலனின் அக்கறை எடுத்து கொள்ள வேண்டி வரும். நரம்பு சார்ந்த பிரச்சனை உண்டாகும். வாகன வசதிகளை குறைத்துக் கொண்டு இருக்க வேண்டிவரும். அலைச்சல் அதிகரிக்கும்.
 
அட்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சில தடைகள் நீங்கி நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வழக்குகள் சீக்கிரம் முடிவுக்கு வரும். எதை எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ அது இனி முடிவுக்கு வரும். மலை போல இருந்த விடயம் பனி போல மறையும். எதற்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. குறை சொல்லி கொண்டிருந்தவர்கள் இனி அமைதி ஆவார்கள்.
 
விரைய சனியுடன் ராகு இணைவு பெறுவது வெளிநாடு செல்தல். வெளிநாடு தொடர்பு உருவாக்குதல். றினைவுக்கு வராத பல காரியம் நினைவுக்கு வந்து செயல்படதுவங்கும். மேலும் குரு விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் தேவையற்ற விரையம் குறைந்து நலம் பெறுவீர்கள். புதிய கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
 
அசையாத சொத்துகள் வாங்குதல் கட்டிய வீடு வாங்குதல் மூலம் சுப விரையங்கள் உண்டாகும். இதன் மூலம் உங்களின் பல நாட்கள் குறை நீங்கி வளம் பெறுவீர்கள்.
 
பரிகாரங்கள்:
 
வியாழக்கிழமை காலை 06.00 - 07.30 மணிக்கு விநாயகர்கள் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு அரிசி மாவில் சக்கரை கலந்து நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் வெற்றியை தரும்.

கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554