குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - மிதுனம்

குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - மிதுனம்

தெளிவான பேச்சு வன்மையால் எதையும் சாதித்து காட்டும் மிதுன ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு ஏழாமிட, தொழில் ஸ்தானாதிபதியான குரு பகவான் தன ஸ்தானத்தில் வரும் 26-05-2026 முதல் அமரவிருப்பது. கடுமையான மனஉளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். உங்களை சார்ந்த பிரச்சனைகளை நீங்களே முடித்து கொள்வீர்கள். குரு பார்வை இடும் இடம் நல்ல பலனை பெற்று தருவார். பொருளாதார நன்மையை பெறுவீர்ள்.
 
குரு பகவான் மறைவு ஸ்தானங்களை பார்ப்பது உங்களின் செயல்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல் ஆறாமிடத்தை குரு பார்ப்பது பழைய கடனை தீர்ப்பீர்கள். பல காலம் தீராமல் இருந்த கடன் படிப்படியாக தீரும். வசதிகளை கூட்டிக் கொள்வீர்கள். இருப்பதை வைத்து செலவு செய்ய பழகிக் கொள்வீர்கள். அமைதியான சூழ்நிலையை விரும்புவீர்கள். நண்பர்களாக இருந்தவர்கள் திடீர் பகையாளியாக மாறிய நிலைமாறி மீண்டும் உங்களிடம் வந்து இணைவார்கள் நாள்பட்ட நோய்கள் மருத்துவம் பார்த்து தீர்வாகும். உடல்நலனை அக்கறை எடுத்து பார்த்துக் கொள்வீர்கள்.
 
அட்டமஸ்தானத்தை குரு பார்வை இடுவது பல சோதனைகளை தாங்கி கொண்டிருந்த உங்களின் நிலை மாறும் குழப்பமான மனநிலையில் இருந்த உங்களுக்கு குழப்பம் தீர்ந்து தெளிவு பெறுவீர்கள். நல்ல நட்பு கிடைக்கும். இதுவரை உங்களை ஏமாற்றியவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகளிலிருந்து விடுபட்டு சகஜநிலைக்கு வருவீர்கள். உங்களை உதாசினப்படுத்தியவர்களை விட்டு விலகி விடுவீர்கள். கருத்து ஒற்றுமை உள்ளவர்களிடம் தொடர்பு கொள்வீர்கள். தொழில் ஸ்தானத்தை குரு பார்வை இடுவது செய்யும் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். காலம் வரும் என்று சாத்து கொண்டு இருந்த நிலைமாறி தொழிலை வளம் பெற செய்ய வேண்டிய யுக்திகளை கையாளுவீர்கள்.
 
20-10-2026 முதல் 22-12-2026 வரை இரண்டு மாதம் அதிசாரமாக மூன்றாமிடத்திற்கு சென்று ஏழாமிடம், ஒன்பதாமிடம் லாபஸ்தானத்தை பார்ப்பது திருமண தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். இழந்த சொத்துகளை மீட்டுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். கஷ்டமான சூழ்நிலைகள் மாறி நன்மை பெறுவீர்கள். மீண்டும் வக்கிரமான பின்பு குரு அருளால் பொருளாதார மேன்மையை அடைவீர்கள்.
 
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் சிறப்பான வளர்ச்சியை பெறுவீர்கள். புத்திர, புத்திரிகளின் ஆசைகளை நிறைவேற்றி தருவீர்கள். மருத்துவ படிப்புகளை படிப்பவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். சொந்த தொழில் நடத்துபவருக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் பாக்கியம் கிட்டும். எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நல்ல காலமாக அமையும். பத்தில் சனியை பார்ப்பது வேலை இல்லாதவருக்கு நல்ல வேலை கிடைக்கும்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமை தத்தாத்ரேயரை வணங்கி நெய் தீபம் ஏற்றி சுண்டல் வைத்து வேண்டிக் கொள்ள சிறப்பான நல்ல பலன் கிடைக்கும் செய்யும் தொழில் மேன்மை அடையும்.