குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - கும்பம்
கொள்கை பிடிப்பும் விடாமுயற்சியும் கொண்டு செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு தன லாபஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் இனிவரும் 26-05-2026 முதல் ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் தொழிலில் சிறந்த நல்ல வாய்ப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் அனைத்தும் சிறப்பாக அமையும்.
ராசிநாதன் சனியுடன் குரு பார்வை தனஸ்தானத்தில் அமைவது மிக சிறப்பான நல்ல பலனாக அமையும் தொடர்ந்து ஏழரை சனியால் பல துன்பம் அடைந்தாலும் கூட குரு பார்வை பெறுவதால் குடும்பத்தில் இருந்த வந்த சச்சரவுகள் நீங்கும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்க பெறுவீர்கள். சரியான முயற்சிகளை செய்து வளம் பெறுவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த உங்களுக்கு ஊக்கம் கிடைக்கும் எதை பேசினாலும் மற்றவர் பார்வைக்கு தப்பாக தெரிந்த நிலைமாறி உங்களின் வார்த்தைகள் தெளிவாக இருக்கும்.
ஆறாமிடத்தில் குரு அமர்வது உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். இதயம், சர்க்கரை சார்ந்த உடல் உபாதைகள் வர காரணமாக இருக்கும் முடிந்த வரை உடல் நலன் மீது அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கும் போது கடன் தொகை சரியாக இருக்கிறதா? என்று பரிசோதித்து கொள்வது நல்லது முடிந்த வரை தனியாரிடம் கடன் வாங்குவதை தவிர்த்து அரசு வங்கிகளில் பெறுவது நல்லது. குறுகிய கால கடன் பெறுவது சிறப்பாக அமையும். உங்களின் தொழில் ஸ்தானத்தை குரு பார்வை இடுவது செய்யும் தொழிலில் தடையின்றி சிறப்பாக செயல்பட உதவி செய்வார் மேலும் உத்தியோகம் பார்ப்பவருக்கு அதிகாரிகளின் நெருக்கடி குறைந்து வளம் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அமையும். பொருளாதார மேன்மை அடைவீர்கள்.
20-10-2026 முதல் 22-12-2026 வரை குரு அதிசாரமாக சிம்மத்திற்கு இரண்டு மாதம் செல்வது உங்களின் ராசி குரு பார்வை செய்து இதற்கு முன் ராசி இணைந்து இருந்தது இனி குருவுடன் கேது இணைவு பெறுவது உங்களுக்கு மிகப்பெரிய நற்பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல், பொருளாதார வளர்ச்சியும் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றமும் உங்களுக்கு சாதகமாக அமையும். இனி குரு வக்கிரமாகி கடகம் மீண்டும் செல்கிறார். இதனால் செய்யும் தொழிலில் விரையத்தை தவிர்க்கவும், சேமிப்பை அதிகரிக்கவும் வாய்ப்பு அமையும். அரசியலிலும், பொது வாழ்விலும் இழந்தவற்றை மீண்டும் கிடைக்க பெறுவீர்கள். மக்களிடம் மீண்டும் செல்வாக்கு கிடைக்கும். சரித்திரத்தில் அங்கமாக செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றுவீர்கள். ஆளுமை அதிகாரம் பெற சிலருக்கு வாய்ப்பு அமையும். நேர்மை, உண்மை, ஒழுக்கம் இதற்கு முக்கியத்துவம் தருவீர்கள். பல நாட்பட்ட கடன் முழுவதும் அடையும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தட்சிணமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வெண் பொங்கல் மிளகு கலந்து வைத்து நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள சகல வித காரியமும் அனுகூலமாகும். தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். பொங்கலை தானம் செய்து விடவும்.
















