பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - மேஷம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - மேஷம்

வைராக்கியத்தை கொள்கையாக கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து ராசியை பார்வை இடுவது உங்களின் மனவலிமை பலம் பெறுவதுடன் செழிப்பான வாழ்க்கை சூழ்நிலை அமையும். எதை செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து, பின்பு அதை செயல்படுத்துவீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து அதில் பயணம் செய்வீர்கள். சுகஸ்தானாதிபதி ஆட்சி பெற்றிருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
 
இனி மூன்றாமிடத்தில் குரு அமர்ந்து களத்திர ஸ்தானத்தை பார்வை இடுவது. கணவன் மனைவி ஒற்றுமையுடன் செழிப்பான வாழ்க்கை சூழ்நிலையும் அமையும். கூட்டுத் தொழில் ஒன்றாக இருக்கும். எதற்கும் துணிவுடன் இருந்து செயல்படுவீர்கள். பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவதால் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றமும் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் பலமுடன் செவ்வாய் அமர்ந்திருப்பதால் நன்றாக தொழில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகளும், நினைத்த இடத்திற்கு இடமாற்றலும் கிடைக்கும்.
 
சூரியன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சந்திரனை பார்ப்பதால் அரசு பணி சார்ந்த வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். தொழில் ஸ்தானாதிபதி பலத்தில் அடிப்படையில் உறுதியான வேலை கிடைக்கும். எதையும் சாதிக்கும் திறமையும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். கலைத்துறையினர் பரபரப்புடன் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெறுவீர்கள். உங்களின் தேவைகளுக்கு ஏற்ப பண வரவு இருக்கும். அரசியலில் எதிர்பார்த்த திருப்பம் அமையும். எதிலும் நிதானம் அவசியம்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
ஓரஞ்சு, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
செவ்வாய், வியாழன், ஞாயிறு.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
09.02.2026 திங்கள் அதிகாலை 03.00 முதல் 12.02.2026 வியாழன் பகல் 02.42 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்கு விநாயகர் வழிபாடு செய்து மூன்று தேங்காய் எண்ணெய் தீபமிட்டு கொள்ளு மாவு உருண்டை படைத்து வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி நன்மை உண்டாகும்.