பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - கன்னி
நேர்மையும், துணிச்சலும் கொண்டு செயல்பட்டு வரும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் சனி / ராகுவுடன் கூடி இருப்பதும், விரையஸ்தானத்தில் கேது அமர்வதும் உங்களின் செயல்பாடுகளில் எதையும் யோசித்து கொண்டிருக்காமல் உடனே செயல்படுவீர்கள். முக்கிய காரியங்களை செய்ய உங்களுடன் மன வலிமை எதையும் சாதிக்கும் வலிமையை பெறுவீர்கள். காரண காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள். ஒரு விடயம் சாதகமான சூழ்நிலையாக அமைந்தால் அதனை மையபடுத்தியே உங்களின் செயல்பாடுகள் அமையும். அரசியலில் புதிய தொடக்கம் இருக்கும். பண பலத்தை பெருக்கி கொள்வீர்கள்.
உங்களின் லாபாதிபதி சந்திரன் ஆட்சி பெற்று அமர்வதால் செய்யும் தொழிலில் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். காலத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி உங்களை மாற்றிக் கொண்டு இடம்பொருள் அறிந்து செயல்படுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் பதவிகளை தக்க வைத்து கொள்வீர்கள். எதை செய்தால் சரியான வழியோ அதை தெரிவு செய்து நலம் பெறுவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக நினைப்பீர்கள். வரும் காலத்தில் சொக்கத்தங்கம் போல ஜொலிப்பீர்கள். மாத பட்ஜட் படி செயல்படுவதற்கு உரிய பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு உங்களின் பங்கு சிறப்பாக இருக்கும். கருத்து ஒற்றுமை உள்ளவர்களும் கூட்டு சேர்ந்து செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல எதிர்காலம் அமையும். கலை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவீர்கள்.
அட்டமாதிபதி செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தையும், விரையஸ்தானத்தையும் பார்வை இடுவது பொருளாதாரத்தை ஈட்டும் வலிமையும் கொடுப்பார். அதனை எப்படி செலவு செய்ய வேண்டுமென்று ஆற்றலையும் கொடுப்பார். தென்மேற்கு திசையிலிருந்து நல்ல தகவல்கள் உங்களை தேடிவரும். எதிர்கால சேமிப்பு பற்றிய ஆலோசனைகளை எடுப்பீர்கள். எதையும் தனி கவனத்துடன் செயல்பட்டுவீர்கள். பல ஆலோசனைகளை செய்து பலன் பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை ஆச்சரியபடும் வகையில் அமையும். உங்களின் கொள்கையை பின்பற்றி வருபவர்களின் கூட்டு உங்களுக்கு சாதகமாக அமையும். கேள்வி ஞானம் பெறுவீர்கள். கூச்சபடாமல் எதை தெரிந்து கொள்ள பிறரிடம் கேள்வி கேட்டு தெளிவு பெறுவீர்கள். சரியான வழியை தேடி செல்வீர்கள். புதிய திட்டங்களை பற்றி ஆய்வு மேற்கொள்வீர்கள். ஆன்லைன் மூலம் வர்த்தகம் சில நேரம் மன சோர்வை தரும். கவனமுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
21-02-2026 சனி இரவு 08.18 முதல் 23-02-2026 திங்கள் இரவு 11.03 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் (04.30 - 06.00) பைரவர் வழிபாடு செய்து வெண் பூசணியில் நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர எல்லாம் தானே விரைவில் நடக்கும்.
















