பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - கடகம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - கடகம்

வாழ்க்கைக்கு தேவையானவற்றிற்கு தகுந்தபடி வாழும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் ஆட்சி பெற்று இருப்பது மனவலிமையும் திடமான நம்பிக்கையும் கொண்டு விளங்குவீர்கள். உங்களின் யோகாதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பது நல்ல தொழில் வளமும். பொருளாதார நன்மையும் பெறுவீர்கள். எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்படி செயல்படுவீர்கள். உங்களின் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை சற்று யோசிக்காமல் செய்து விடுவீர்கள். பண பலம் பெருகும்.
 
இம்மாதம் சூரியனுடன் செவ்வாய் சேர்க்கை இருப்பதால் அடிக்கடி உஷ்ணம் சார்ந்த பிரச்சனை வரும். வறண்ட இருமல், சளி கட்டு வந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உடல் நலனில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நிலையான தொழில் செய்து வருபவருக்கு தொழிலை மேம்படுத்தி கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். சரியான பாதையை தெரிவு செய்து பயணம் செய்வீர்கள். குரு அருள் கிடைக்க பெறுவீர்கள். தனி மனிதனின் ஒழுக்கம் மேம்படும். முகம் பொலிவுடன் திகழும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். குரு விரையஸ்தானத்தில் இருப்பதால் பண புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
 
அட்டமத்து சனியை குரு பார்வை இடுவதால் கெடு பலன்கள் குறையும். திருமண தடைகள் நீங்கும். விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். கேட்டவற்றை பெறும் நல்ல வாய்ப்பு அமையும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். நிகழ்ச்சிகளை சிறப்பாக அமைத்து, அனைத்து அன்பர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆற்றலும், ஆராய்ச்சி தன்மையும் பெறுவீர்கள். கணணி படிப்பில் புதியவற்றை கற்று கொள்வீர்கள். சமமான தெளிவுகளை பெற்று வளம் பெறுவீர்கள். அரசியலில் சிலர் நம்பிக்கை துரோகிகளாக இருந்தார்கள் என்பதை உணர்வீர்கள். அவர்களை விட்டு விலகுவீர்கள். செய்வதை திருந்த செய்தலே நன்மையை தரும். சுமையாக இருந்து வந்த பல விடயங்கள் இனி செம்மையான பாதையில் சென்று, அனைத்து வளமும் பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, ஓரஞ்சு, பல வர்ணம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
திங்கள், செவ்வாய், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
17-02-2026 செவ்வாய் காலை 10.05 முதல் 19-02-2026 வியாழன் மாலை 04.11 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து நெய் தீபமிட்டு சிவப்பு அரளி கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் தடையின்றி சுபிட்சமாக அமையும்.