ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - மகரம்
மனதில் பட்டதை மறைக்காமல் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் மூன்றில் அமர்ந்து குரு பார்வை பெறுவதால் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். எதையும் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்று எண்ணி செயல்படுவீர்கள். இதுவரை பட்டதுன்பம் நீங்கி சுபிட்சம் பெற்றும் வளமான வாழ்க்கை சூழ்நிலையும் அமைய பெறுவீர்கள். பொது விடயங்களில் அதிகமான ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். உழைப்பால் முன்னேற வேண்டுமென்று எண்ணுவீர்கள். எதையும் பிறருக்காக விட்டு கொடுத்து நல்லுறவுகளை பலபடுத்திக் கொள்வீர்கள்.
தனஸ்தானத்தில் ராகுவுடன் சந்திரன் இணைவு பெறுவது வர்த்தக முதலீடுகளில் பணம் பெறும் வாய்ப்புகள் அமையும். ஆன்லைன் தொழில் நுட்பம் மூலம் உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் காண வழி கிடைக்கும். திறமையும், நுண்ணறிவும் இருந்தால் அதற்கு தகுந்த முதலீடு தானே வரும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்வீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு எல்லா வழிகளிலும் பலன் கிடைக்கும்.
சனி மூன்றாமிடத்தில் இருப்பது உங்களின் அனைத்து முயற்சிகளுக்கு பெரிய வெற்றியை தரும். கொடுத்த இடத்தில் இருந்து பணம் கிடைப்பதற்கு.. உங்களின் சுயமுயற்சிக்கு பெரும் வெற்றி கிட்டும். நினைத்ததை சாதிக்க உங்களின் பயணம் சிறக்க எதையும் மன உறுதியுடன் செயல்பட்டால் வெல்லலாம். சுகஸ்தானாதிபதி செவ்வாய் பஞ்சமஸ்தானத்தில் எதையும் சாதித்து கூட்டுவீர்கள். பொது வாழ்வில் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். களத்திர ஸ்தானத்தில் சூரியன் அமர்வது கூட்டுத்தொழில் செய்து வருபவருக்கு உறுதி துணையின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
முதலீடுகளில் கவனம் செலுத்தி வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பணிபுரியவருக்கு வேலை செய்யுமிடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். ஏழாமிட புதன் உங்களின் பாக்கியாதிபதி என்பதால் உங்களின் மனதில் நினைத்த காரியங்களை செயல்படுத்தலும் அனுபவமிக்கவர்களின் நல்ல அறிவுரைகளும் புதனால் கிடைக்க பெறுவீர்கள். ஏழாமிட புதன் உங்களின் பாக்கியாதிபதி என்பதால் உங்களின் மனதில் நினைத்த காரியங்களை செயல்படுத்தவும் அனுபவமிக்கவர்களின் நல்ல அறிவுரைகளும் புதனால் கிடைக்கப் பெறுவீர்கள். மொழி தெரியாதவரிடம் கூடபேசி புரிய வைக்கும் அளவிற்கு அறிவாற்றல் உண்டாகும்.
உண்மை, நேர்மை எப்பொழுதும் உங்களை எங்கும் வாழ வைக்கும். மறைவுஸ்தானத்தின் அதிபதியான குரு உங்களின் ராசியில் நீசம் பெறுவது அப்படிபட்ட குரு உங்கள் ராசியை பார்ப்பது குரு பார்க்க கோடி நன்மை என்பது போல பனிரெண்டு ராசிகளில் மறைந்தாலும், பார்த்தாலும் பலன் தரும். ஒரே ராசி உங்கள் ராசிநாதன் என்பதால் குருவின் பார்வை நல்ல பலனை பெற்று தரும். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் எட்டில் மறைவு பெறுவது நல்ல தல்ல என்றாலும் குரு பார்வையே உங்களுக்கு நல்ல பலனை தரும் என்பதால் இம்மாதம் உங்களுக்கு அதிகம் வெற்றி நிச்சயம் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், ஆரஞ்சு,
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
13-08-2026 வியாழன் காலை 08.08 முதல் 15-08-2026 சனிக்கிழமை பகல் 01.02 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் மகாலெட்சுமி வழிபாடு செய்து குங்குமம் வைத்து நெய் தீபமேற்றி இனிப்பு பொங்கல் செய்து உங்களின் வேண்டுதலை சொல்லி அனைத்து பலன்களும் முழுமையாக கிடைக்கப் பெறுவீர்கள்.
















