2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மிதுனம்

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மிதுனம்

எடுத்த காரியத்தை எளிதில் செயல்படுத்தி வளம் பெறும் மிதுன ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் ஆறாமிடமான விருச்சிக ராசியில் அமர்ந்திருப்பதும் குரு பார்வை பெறுவதும் வங்கி மூலம் கடன் பெற்று செய்யும் தொழிலை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை பெற்று தரும். புதிய முயற்சிகளுக்கு எளிதில் நற்பலன்கள் பெறுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு பனிரெண்டில் குருவும் நான்கில் கேதுவும் அமர்ந்திருப்பது சரியான படி தீர்மானம் செய்யாமல் பிறரின் மீது நம்பிக்கை வைத்து தொழில் முதலீடு செய்தால் ஏதாவது வழியில் சிரமம்பட வேண்டிவரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். வெளிபடையான உங்களின் பேச்சு சில நேரம் தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும்.
 
தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்வது தனிப்பட்ட உங்களின் செலய்பாடுகள் மூலம் வளர்ச்சியை பெறும் வாய்ப்பாக அமையும். உங்களின் பாக்கியஸ்தானத்தில் பாக்கியாதிபதி சனியுடன் மாதிரி சுக்கிரன் இணைவு பெற்று அமைவது உங்கள் அனைத்து முயற்சிகளுக்கு பக்க பலமாக நன்மைகள் உண்டாகும்.
 
திட்டமிட்ட சில காரியம் சிலதடைபட்டாலும் எதிர்பார்த்தபடி எல்லாம் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்ந்தங்களும் எதிர்பார்த்த நன்மைகளும் விரைவில் நடக்கும் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சியும், சிலருக்கு வேலை வாய்ப்பும் அமைய பெறுவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உங்களின் பொருளாதார நிறை மேன்மை பெறும்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
5, 6, 8.

அதிர்ஷ்ட மாதங்கள்:

ஜனவரி, மே, ஜுன், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, வெண்மை, நீலம்.
 
பரிகாரங்கள்:
 
வியாழகிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபமேற்றி, வஸ்தரம் சாத்தி வேண்டு கொண்டு வர உங்களின் எண்ணம் எல்லாம் ஈடேறும்.