2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - தனுசு

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - தனுசு

தன்னுடைய வாழ்க்கைக்கு தானே தேடிக் கொள்ளும் தனுசு ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு யோகாதிபதி சூரியன் துவக்கத்தில் ராசியில் அமர்வது சிறப்பான பலனாக அமையும். இந்த ஆண்டு பலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்க பெறுவீர்கள். அரசியலில் ஈடுபாடு கொண்டி இருக்கும். சிலருக்கு நல்ல பதவியும் அந்தஸ்தும் உண்டாகுமு். நினைத்தபடி நினைத்த சூழ்நிலைகளில் ஆடைய நீங்கள் முயற்சிகள் செய்தால் அது அமையும்.
 
உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் சனி அமர்வதும், லாபாதிபதி சுக்கிரன் இணைவு பெறுவதும் யோக பலன்களை பெற்று தரும். உங்களின் வளர்ச்சிக்கு வழிகிடைக்கும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். குழப்பமான சூழ்நிலைகள் மறையும். எதிர்கால திட்டங்களுக்கு பலன் அளிக்கும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமையும். புதிய செயல்பாடுகள் உங்களை மேலும் ஊக்கபடுத்தும் புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். 
 
சொந்த தொழில் செய்து வருபவருக்கு லாப நஷ்டம் கலந்தே வரும். ஆன்லையின் வர்த்தகம சுமாரான பலனை பெற்று தரும். உங்களின் ராசிநாதன் முற்பகுதியில் விரைய தனஸ்தானங்களை பார்ப்பதால் பாதிப்புகள் இருக்காது பிற்பகுதியில் ராசியை பார்ப்பதால் குரு அருள் முழுமையாக கிடைப்பதால் எல்லா விதமான வளமும் கிடைக்க பெறுவீர்கள். நல்ல வேலை வருமான வாய்ப்புகள். பொருளாதார மேன்மை அடைய பெறுவீர்கள். 
 
கலைத்துறையினருக்கு தொடர் வாய்ப்புகள் அமையும் நிறைந்த பொருளாதார சூழ்நிலைகள் அமையும் சிறப்பான ஆண்டாக இந்த ஆண்டு அமையும். தொழில் ஸ்தானத்தில் கேது இருக்கும் வரையில் தொழிலில் நன்றாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் வளர்ச்சியை பெறுவீர்கள். வரும் ஆண்டு உங்களின் விருப்பமான கல்வி வாய்ப்பை பெறுவீர்கள். எல்லா வளமும் நலமும் பெறும் வாய்ப்பு அமையும்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
3, 6, 8, 9.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், நீலம், சிவப்பு.

பரிகாரங்கள்:
 
புதன் கிழமைகளில் நரசிம்மர், பெருமாள் வழிபாடு செய்து துளசி மாலை போட்டு நெய் தீபமேற்றி வணங்கி வர உங்களின் வேண்டுதல் நிறைவேறும். சுப்ரமணியன் வழிபாடு உங்களுக்கு மனவலிமையை பெற்று தரும்.