2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் ராகு வரும் 26-04-2025 முதல் அமர்வதும் கேது தொழில் ஸ்தானத்திலும் அமர்ந்து கேந்திரத்தில் ஆதிக்கம் செலுத்தி நற்பலன்களை தருவார்கள்.
சுகஸ்தானத்தில் ராகு சனியுடன் கூடி அமர்வதால் உடல்நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும். பண்பையும், நற்குணங்களிலும் வளர்த்து கொள்ள வேண்டிவரும். தேவையற்ற விடயங்களை தவிர்த்து ஆக்க பூர்வமான சில காரியங்களுக்கு முக்கியத்துவம் தருவது நலம். நரம்பு சம்மந்தமான சில பிரச்சனைகள் வரும் என்பதால்... உணவுகளில் நரம்பு பலப்படும் உணவு எடுத்துக் கொள்வது அவசியம். வாகன ஓட்டிகள் பொறுமையுடன் வாகனத்தை இயக்குவது அவசியம் எதையும் ஆழமாக சிந்தித்து செயல்படுவது உங்களுக்கு நன்மையை பெற்று தரும். புதிய திட்டங்களை சில காலம் கழித்து செய்வது நல்லது.
தொழில் ஸ்தானத்தில் கேது அமர்வது இனி சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொகைகளை உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் போகும். அதிக இருப்பு வைத்து கொள்வதை தவிர்த்து தேவைகளுக்கு மட்டும் கொள்முதல்களை செய்வதன் மூலம் சில நெருக்கடியாக சூழ்நிலைகளை தவிர்க்கலாம். சொல்லி செய்வதைவிட சொல்லாமல் எதையும் செய்வதன் மூலம் நிகழ்காலத்தை சீராக கொண்டு செல்ல முடியும். வருமானத்திற்கு தகுந்த செலவுகளை செய்வதன் மூலம் புதிய கடன் படுவதை தவிர்க்கலாம். ஆடம்பரத்தை தவிர்த்து அத்தியாவசியமான செலவுகளை செய்வதன் மூலம் வரும் துன்பத்தை குறைத்துகொள்வது நல்லது. இறை வழிபாடு மூலம் உங்களை சரி செ்யதுகொள்ளலாம்
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் கருட வழிபாடு செய்து நெய் தீபமேற்றி கருட மந்திரம் சொல்லி வேண்டிக் கொள்வதுடன் பறவைகளுக்கு உணவு அளிப்பது நல்ல பலனை பெற்றுத் தரும்.