2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - மகரம்

2025 - 2026 ராகு / கேது  பெயர்ச்சி பலன்கள் - மகரம்

அனைவரின் வாழ்க்கையையும் வளபடுத்த நினைக்கும் மகர ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை மூன்றாமிடத்து ராகு இனி தனஸ்தானத்திலும் பாக்கியஸ்தானத்தில் இருந்தபோது அட்டமஸ்தானத்திலும் அமர்கின்றார்கள். வரும் 26-04-2025 முதல் ராகு / கேது பெயர்ச்சி உங்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும்.
 
தனஸ்தானத்தில் ராசிநாதன் சனியும் ராகுவும் இணைவு பெறுவது உங்களின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை பெற்று தருவார்.  வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். பேச்சுதிறன் அதிகரிக்கும். உங்களின் ஈர்ப்பு தன்மையினால் பிறரிடம் சாதூர்யமாக பேசுவீர்கள். சிறு வயது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பொது வாழ்வில் ஈடுபாடு கொண்டாலும் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இருக்காது. முதலீடு இல்லாத தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காலத்தையும், நேரத்தையும் அறிந்து அதற்கு தகுந்தபடி நடப்பீர்கள். குரு பெயர்ச்சிக்கு பின்பு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
 
அட்டம கேதுவாக அமர்வது உங்களின் முன்னேற்றத்திற்கு சில தடைகளாக அமையும். எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். பொன்னும் பொருளும் சேரும். அதே நேரத்தில் அடுத்தவருக்கு இரக்கப்பட்டு உங்களிடம் இருக்கும் பொருளையோ, பணத்தையோ கொடுத்து ஏமாறாமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் நினைக்கும் காரியம் நடக்க பிறரை நம்பிகொண்டிருந்தீர்களேயானால்..அவரே உங்களை ஏமாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். சற்று எச்சரிக்கையால் இருப்பது நல்லது.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்கு பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி, விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள தடைபட்ட காரியம் சீராக நடக்கும்.