2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

2025 - 2026 ராகு / கேது  பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

லட்சியத்தை அடைய கொள்கை பிடிப்புடன் செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த ராகு ஜென்மத்திலும் அட்டம கேது களத்திரஸ்தானத்திலும் அமர்வது வரும் 26-04-2025 முதல் உங்களின் வாழ்வில் செயல்பாடுகள் மேன்மையை தரும்.
 
ஜென்ம ராகு ராசிநாதன் சனியுடன் இணைவு பெறுவது முயற்சிகள் இருந்தும் செயலில் வேகம் இன்றி இருந்த நிலை மாறி சற்று சுறுசுறுப்பை பெறும். காலத்தையும் நேரத்தையும் தட்டி கழிக்காமல் வேகமாக செயல்படுவீர்கள். தனிதிறமைகள் கொண்டு இயங்குவீர்கள். புதிய திட்டங்களுக்கு ஆலோசனைகளை செய்து வருவீர்கள். காலத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழ்வில் பல உன்னதமான மாற்றங்கள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். தொழிலில் முழுமையான கவனம் செலுத்துவீர்கள். குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்களுக்கு மேலும் ஊக்கமும் எடுத்த காரியம் கைகூடும் பொருளாதாரத்தில் வளர்ச்சியையும் உறுதியான நம்பிக்கையும் கொண்டு விளங்குவீர்கள்.
 
இனி களத்திர ஸ்தானத்தில் கேது அமர்வது கூட்டு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆன்லைன் வர்த்தகததில் ஆதாயம் கிடைக்கும். ஆன்லைன் மூலம் தொழில் செய்பவருக்கு நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். கோவில்கள், ஆலய திருப்பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து அதற்கு உங்களால் உண்டான உதவிகளையும் உடல் உழைப்பு தந்து வருவீர்கள். அரசியலில் புதிய நண்பர்களின் தொடர்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமைய பெறும். கணவன் மனைவி உறவு சுமூகமான சூழ்நிலையை தரும். ஆன்மீக குருமார்களையும், மகான்களையும் சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். குரு பெயர்ச்சிக்கு பின்பு வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும்.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமைகளில் நரசிம்மர், பஞ்சமிகளில் வராகி வழிபாடும் தொடர்ந்து செய்து வர உங்களின் தொழிலும், உத்தியோகத்திலும் முன்னேற்றம் பொருளாதார வளமும் பெறுவீர்கள்.