2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - கடகம்

உறுதியான உள்ளமும், தெளிவும் கொண்ட கடக ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு வரும் 26-04-2025 முதல் அட்டம ராகுவாகவும், தனஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து பலன் தருகிறார்கள்.
சூரியன் வீட்டில் கேது அமர்ந்து பல வழிகளில் உங்களின் பணிகளில் முடக்கம் செய்து வந்தாலும் கேது ஆதிக்கம் இருப்பதால் அரசாங்க காரியங்கள் அனுகூலமான சில சூழ்நிலைகள் அமையும். பணியில் இருப்பவர்கள் அதிகார வர்க்கத்தால் சில சங்கடம் உண்டாகலாம். அரசியலில் இருப்பவருக்கு சில சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். எந்த எளிமையான காரியமாக இருந்தாலும் பிறரின் உதவியுடன் செய்ய வேண்டிவரும். துணி்ச்சலான முடிவுகள் எடுப்பதன் மூலம் உங்களின் காரியம் சில நேரம் நன்மையை பெற்று தரும். குரு பெயர்ச்சிக்கு பின்பு நல்ல பலன்கள் ஓரளவு கிடைக்கும்.
அட்டம ராகு உங்களை எப்பொழுதும் எச்சரிக்கையுடன் செயல்படும் சூழ்நிலையை உருவாக்கும். எப்படி பட்ட உறவாக இருந்தாலும் நண்பராக இருந்தாலும் பிணயம் போடுவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் உங்களின் பொருளாதார நிலை சரியில்லாத போது சிலர் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டிவரும் என்பதால் ஒருவருக்கு செய்து கெட்ட பெயர் எடுப்பதை விட ஒருவருக்கு எதுவும் செய்யாமல் கெட்ட பெயர் எடுப்பது எவ்வளவோ - மேன்மை உண்டாகும். குரு பெயர்ச்சி பின்பு அட்டம ராகுவை குரு பார்ப்பது நல்லது. அதேவேளை விரைய ஸ்தானத்தில் குரு இருப்பதால் கவனமுடன் செயல்படுவது உங்களுக்கு பாதுகாப்பானது.
பரிகாரங்கள்:
செவ்வாய்கிழமை ராகு காலத்தில் மாரியம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் (ஆமணக்கு) விளக்கு ஏற்றி மாவு சக்கரை கலந்து நைவேத்தியம் செய்து தானம் செய்து வர வரும் கஷ்டம் தீரும்.