எந்த மாதிரி கட்டிடம் அமைத்தால் சிறப்பாக இருக்கும்?

எந்த மாதிரி கட்டிடம் அமைத்தால் சிறப்பாக இருக்கும்?

அறிவியல் பூர்வமாக வீட்டைச் சுற்றி (வலம் வரும் அளவுக்கு) சிறிதளவு இடம் விட்டு கட்டிடத்தை எழுப்பினால், வீட்டுக்குள் அதிகளவு காற்று வந்து செல்லும் வாய்ப்பு ஏற்படும். தூய பிராணவாயு அதிகம் கிடைக்கும்.

ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தே கட்டிடம் அமையும் என்பது ஜோதிட விதி. ஜாதகத்தில் 4ஆம் இடம் கட்டிட ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. சுக்கிரன் கட்டிடக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் ஜாதகத்தில் 4ஆம் இடமும், சுக்கிரனும் சிறப்பாக அமைந்திருந்தால் தோட்டத்துடன் கூடிய வீடு, தோப்புக்கு மத்தியில் அமைந்த வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றிருந்தாலோ, பகை வீட்டில் இருந்தாலோ, பகை கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருந்தாலோ, 4ஆம் அதிபதி வலுவிழந்து காணப்பட்டால், அவர்களின் வீடு வழக்கில் சிக்கியிருக்கும் அல்லது வீட்டிற்குள் காற்று அதிகம் வராத நிலையில் கட்டப்பட்டிருக்கும். எனவே, கிரக அமைப்பைப் பொறுத்தே ஒருவருக்கு வீடுகள் அமையும்.

எனவே, வீட்டின் அமைப்பில் இது சிறந்தது, அது சிறந்தது என்று பார்ப்பதை விட, ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்கு ஏற்றவாறு வீடு அமைத்துக் கொண்டால் மேலும் பலன் பெறலாம்.