குழந்தை பெற பெங்சுயி குறிப்புகள்

குழந்தை பெற பெங்சுயி குறிப்புகள்

குழந்தை வரம் வேண்டி மருத்துவமனைகளில் பழியாக கிடக்கும் தம்பதியர், அரச மரங்களை சுற்றிவரும் பெண்கள் இவர்களுக்கெல்லாம் நம்பிக்கை டானிக் கொடுக்கிற்து பெங்சுயி சாஸ்திரம். நம்மூர் வாஸ்து சாஸ்திரம் போல் இது சீனாவில் நடைமுறையில் இருக்கும் சூழல் சாஸ்திரம். ந்ம்மை சுற்றியிருக்கும் சூழலுடன் இணைந்து வாழ்வது என்பதுதான் இதன் அடிப்படை. குழந்தையில்லா தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என சிலவற்றை முன் வைக்கும் பெங்சுயி, இது மருத்துவம் அல்ல. பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைதான். இதனால் பலனும் விளைந்திருக்கிறது என்று குறிப்பும் கொடுக்கிறது. தாய்மையடைய‌ பெங்சுயி தரும் குறிப்புகள்...

• பழங்களுடன் கூடிய மரம் என்பது தாய்மைக்கான அடையாளம். எனவே வீட்டில் இடமிருந்தால் கனிகளை தரக்கூடிய மரங்களை நட்டு வளர்த்து வாருங்கள். பூத்து காய்க்கும் அம்மரம் போலவே அந்த வீட்டு பெண்களும் கருவுற்று குழந்தைப் பேறை அடைவார். இதில் கனி என்பது குழந்தைச் செல்வத்தின் குறியீடு.

• யானை, முயல் போன்ற விலங்குகள் தாய்மையின் சின்னங்கள். எனவே இந்த விலங்குகளின் படங்களை உங்கள் படுக்கையறையில் மாட்டி வைக்கலாம்.

• வீட்டினுள் கூரிய முனைகளோ, கூர்மையான வளைவுகளோ, கம்பிகளோ இருக்க்க்கூடாது. இந்த கூரிய முனைகள் விஷ அம்புகளாக செயல்படும். இவை வீட்டினுள் இருக்கும் ஆக்க சக்தியை அம்பு போல் பிளந்து வெளியேற்றி விடும்.

• பெங்சுயியின் அடிப்படை ச்க்திதான். இந்த சக்தி உங்கள் வீட்டினுள் நுழைய வழிவகை செய்யவேண்டும். இந்த ச்க்தி வாசல் வழியே புழங்குவதால், அங்கே தடைகள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வெண்டும். தடைகள் என்பது வாசலை மறித்தாற்போல் நிறுத்தப்படும் கார், பைக்குகளையும் உள்ளடக்கியது. எந்த தடங்கலும் இல்லையென்றால் ஆக்க சக்தி தடையின்றி வீட்டினுள் புகுந்து குழந்தை செல்வம் கிடைக்க வழி செய்யும்.

• கேட்பதற்கு இது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும். ஆனால் இதில் அர்த்தமுள்ளது. குழந்தை வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் முதல் காரியமாக உங்கள் படுக்கையின் கீழே இருக்கும் அத்தனை பொருட்களையும் அப்புறப்படுத்தி விடுங்கள். அதன் கீழே படிந்து இருக்கும் தூசுகளையும் சுத்தப்படுத்துங்கள் இதன் பின்னர் எக்காரணத்தை முன்னிட்டும் படுக்கையின் கீழே இருக்கும் தரைப் பகுதியை தொந்தரவு செய்யக்கூடாது. குறிப்பாக தூசுகளைக் கூட சுத்தம் செய்யக்கூடாது. அப்போதுதான் அங்கே குழுமும் ச்க்தி, ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த வழிமுறைகளை கையாண்டு பாருங்கள். உங்கள் வீட்டிலும் குழந்தை தவழும் என்று ந்ம்பிக்கையூட்டுகிறது பெங்சுயி சாஸ்திரம்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!