ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் 108 போற்றிகள்

ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் 108 போற்றிகள்

ஓம் அப்பா போற்றி
ஓம் அறமே போற்றி
ஓம் அருளே போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் அரவ சயனா போற்றி
ஓம் அரங்கமா நகராய் போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் ஆறுமுகனின் அம்மாள் போற்றி
ஓம் அனுமந்தன் தேவே போற்றி
ஓம் ஆதியே அனாதி போற்றி
ஓம் ஆழ்வார்கள் தொழுவாய் போற்றி
ஓம் மூலமே போற்றி
ஓம் ஆபத்துச் சகாய போற்றி
ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் உமையம்மை அண்ணா போற்றி
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
ஓம் உத்தமர் தொழுவாய் பொற்றி
ஓம் உம்பருக் கருள்வாய் பொற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண சீலா போற்றி
ஓம் ஏழைப்பங்களா போற்றி
ஓம் கலியுக வரதா போற்றி
ஓம் கண்கண்ட தேவே போற்றி
ஓம் கடுவர் கனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் காமரு தேவே போற்றி
ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் கோக்களைக்காத்தாய் போற்றி
ஓம் கோவிந்தா முகுந்தா போற்றி
ஓம் சர்லோகேசா போற்றி
ஓம் சாந்தகுண சீலா போற்றி
ஓம் சீனிவாசா போற்றி
ஓம் சிங்கார மூர்த்தி போற்றி
ஓம் சிக்கலையறுப்பாய் போற்றி
ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
ஓம் தரணியைக் காப்பாய் போற்றி
ஓம் திருமகள் மணாளா போற்றி
ஓம் திருமேனி உடையாய் போற்றி
ஓம் திருவேங்கடவா போற்றி
ஓம் திருமலைக் கொழுந்தே போற்றி
ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி
ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி
ஓம் கடவமு தளித்தாய் போற்றி
ஓம் நந்தகோபாலா போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி
ஓம் நவமணி தரிப்பாய் போற்றி
ஓம் நரசிம்ம தேவே போற்றி
ஓம் நான்மறை தொழுவாய் போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் தசாவதாரா போற்றி
ஓம் தயாநிதி ராமா போற்றி
ஓம் தந்தைசொல் காத்தாய் போற்றி
ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி
ஓம் பட்டத்தைத் துறந்தா போற்றி
ஓம் பரதனுக்கீந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துணைவா போற்றி
ஓம் பரந்தாமா கண்ணா போற்றி
ஓம் பாஞ்சாலி மானம் காத்த 'பார்புகழ் தேவே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தி போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் வாமன வரதா போற்றி
ஓம் உலகினை அளந்தாய் போற்றி
ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி
ஓம் பரகதி அருள்வாய் போற்றி
ஓம் துருவனும் தொழுவாய் போற்றி
ஓம் சபரியின் கனிவே போற்றி
ஓம் துருவதிலை தந்தாய் போற்றி
ஓம் நற்கதி தந்தாய் போற்றி
ஓம் வையகம் புகழ்வாய் போற்றி
ஓம் முழுமதிவதனா போற்றி
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
ஓம் கமலக்கண்ணா போற்றி
ஓம் கலைஞனே மருள்வாய் போற்றி
ஓம் கஸ்தூரி திலகா போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் பவளம் போல் வாயா போற்றி
ஓம் பவப்பிணி ஒழிப்பாய் போற்றி
ஓம் நான்கு பயத்தாய் போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் சங்குசக் கரனே போற்றி
ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி
ஓம் கோபிகள் லோலா போற்றி
ஓம் கோபமும் தணிப்பாய் போற்றி
ஓம் வேணுகோபாலா போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் புருடோத்தமனே போற்றி
ஓம் பொன்புகழ் அருள்வாய் போற்றி
ஓம் மாயா வினோதா போற்றி
ஓம் மனநிலை தருவாய் போற்றி
ஓம் விஜயராகவனே போற்றி
ஓம் வினையெலாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் பதும நாயனே போற்றி
ஓம் பதமலர் தருவாய் போற்றி
ஓம் பார்த்தசாரதியே போற்றி
ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் கரிவாத ராஜா போற்றி
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
ஓம் சுந்தர ராஜா போற்றி
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
ஓம் சுந்தர ராஜா போற்றி
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆளாய் போற்றி
ஓம் அரிஅரி நமோ நாராயணா போற்றி