அறம்மிகு அடிகளாருக்கு காட்சியளித்த அநாதி நாதர் சித்தர் !

அறம்மிகு அடிகளாருக்கு காட்சியளித்த அநாதி நாதர் சித்தர் !

திருச்சியில் ஸ்ரீ தக்ஷிண காளி சித்தர் பீடம் என்ற பிரம்ம ஞான தர்மசாலையை நிறுவி மாணவர்களுக்கு யோக கலையை கற்பித்து வரும் குருவும், நிர்விகல்ப சமாதி நிலை தியானத்தை மேற்கொண்டு அருள் ஆற்றலை பெற்றவரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அறம்மிகு அடிகளார் (Aramigu Adigalar) அவருடைய அண்மைய ஆன்மீக உரையில் தன்னுடைய குருநாதரை பற்றியும் அவருடைய மகாத்மியங்களை பற்றியும் பக்தர்களுக்கு எடுத்துரைத்தார். 

அதன் தொகுப்பை கீழே காணலாம்.
 
அனைவருக்கும் பிரம்ம ஞான குரு வணக்கங்கள்...

நிர்விகல்ப சமாதி நிலை தியானத்தில் ஈடுபடும் போது ஒரு பிரகாசமான ஜோதியை தரிசித்தேன். அந்த ஒளி தான் என்னை நிர்விகல்ப சமாதி நிலை தியானத்தில் வழிநடத்தியது. 
 
இதுவரை நான் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத ஒரு விசயத்தை தற்போது பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறேன். 
 
அந்த ஒளி தன்னை அநாதி நாதர் சித்தர் என சொன்னது. இந்த அநாதி நாதர் தான் திருவண்ணாமலையில் ஜோதி ரூபமாக அருள் பாலிக்கும் அண்ணாமலையாராக நாம் வணங்கி வருகிறோம். அது மட்டும் இல்லாமல் அவர் இமாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் இமயமலை தொடரில் சூட்சமமாக இன்றும் ஜோதி வடிவில் தவ நிலையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். 
 
 
அந்த அநாதி நாதர் சித்தரைத் ( Anathi Nathar Siddhar ) தான் நான் ஜோதி ரூபமாகத்தான் தரிசித்தேன். இதைத் தொடர்ந்து என்னுள் அநாதி நாதர் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் தேடலும் உண்டானது. 
 
 பத்து ஆண்டுகள் தொடர் தேடலில் ( வரலாறு - இதிகாசங்கள்-  புராணங்கள்- வட இந்திய இலக்கியங்கள்- சமஸ்கிருத மொழி சார்ந்த இலக்கியங்கள் - சித்தர்களின் வரலாறு-  ஆகியவற்றில் தேடும்போது ஏனைய சித்தர்களின் வரலாறுகளை அறிந்து கொண்ட எனக்கு அநாதி நாதரை பற்றி மிக அரிதாகவே தெரிந்து கொள்ள முடிந்தது.  அத்துடன் அநாதிநாதரை பற்றிய வரலாறு .. அவருடைய தோற்றம்.. அவருடைய மகாத்மியங்கள்.. இது பற்றி மக்களுக்கு தெரியவில்லை.  தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் முதன்மையான காரணம். 
 
இடை இடையே நான் தியானங்களில் ஈடுபடும் போது என்னை அவர் சூட்சமமாகவும், ஜோதி ரூபமாகவும் தோன்றி காட்சி அருளி ஞானத்தின்  மார்க்கத்திற்குரிய பாதையை காண்பித்தார். அவர் போதித்த பாதையில் தான் நான் நிர்விகல்ப சமாதி நிலை தியானத்தை மேற்கொண்டு வருகிறேன். அத்துடன் மட்டும் இல்லாமல் என்னை நோக்கி வரும் சீடர்களுக்கும் யோக பாதையை காண்பிக்கிறேன்.
 
 
இந்த நிலையில் அநாதி நாதருக்கும், நம் அண்டை நாடான இலங்கைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை கண்டறிந்தேன்.  2400 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் உள்ள தலம் தான் திருக்கேதீஸ்வரம். இந்த தொன்மையான சிவாலயம் ஒரு காலகட்டத்தில் சேதமடைந்தது. அதன் பிறகு அந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டு தற்போது வரை பக்தர்களின் நாளாந்த பயன்பாட்டில் உள்ளது. 
 
ஆனால் 2400 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடம் அனாதி நாதர் ஷேத்ரமாகத் தான் இருந்திருக்கிறது. இதை என்னுடைய தவ நிலையில் இருக்கும் போது கண்டறிந்தேன்.  இங்கு நவகிரகங்களில் சாயா கிரகங்களில் ஒன்றான கேது பகவான் வழிபட்டதால் அந்த சிவாலயத்திற்கு திருக்கேதீஸ்வரம் என பெயர் மருவியது. அதற்கு முன் அந்த ஆலயத்திற்கு பெயர் அநாதி நாதர் ஆலயம் தான். அந்த அநாதி நாதர் தான் எனக்கு ஜோதி ரூபமாக காட்சியளித்தார். 
 
இந்த அநாதி நாதர் ஆலயத்தில் சிவபெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பார். சிவபெருமானின் பின்பகுதியில் கடல் இருக்கும். திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள கடலில் இருந்து மகாவிஷ்ணு சிவபெருமானை - அநாதி நாதரை வணங்குவதாக ஐதீகம்.
 
அநாதிநாதரை பற்றி இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவர் எனக்கு இட்ட கட்டளை. 
 
 
ராமாயண காலகட்டத்தில் இருந்து அநாதிநாதரின் வழிபாடு இருந்ததாகவே கருதப்படுகிறது. ஏனெனில் மண்டோதரியின் தந்தையான மயன் இந்த அநாதி நாதர் ஆலயத்தில் வழிபாடு செய்திருக்கிறார்.  அவர் மட்டுமல்ல கேது பகவானும் வழிபட்டு இருக்கிறார்.  
 
உடனே நம்மில் சிலர் அநாதி நாதரை வணங்குவதால் என்ன பலன் கிடைக்கும்?  என கேட்பார்கள். 
 
பிறவி சுழற்சியிலிருந்து விடுதலை கிடைக்கும். இது மட்டுமல்ல மன அமைதி - ஆரோக்கியம் - குடும்ப நலம் - தொழில் முன்னேற்றம் - என அனைத்து சுப பலன்களும் கிடைக்கும். 
 
திருக்கேதீஸ்வரம் சென்று அங்கு திருக்கேதீஸ்வரராக அருள் பாலிக்கும் சிவபெருமானை வணங்குவதுடன் அதற்கு பின்னால் சென்று சூட்சும ஒளியுடன் காட்சியளிக்கும் அநாதி நாதரையும் வணங்க வேண்டும். திருவண்ணாமலையில் ஜோதி ரூபமாக அண்ணாமலையாராக காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அநாதி நாதரையும் வணங்க வேண்டும். 
 
இது தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள ஸ்ரீ தட்சிண காளி சித்தர் பீடத்தை தொடர்பு கொள்ளவும்..
 
வாட்ஸ்அப் எண்: 8438038030
தொடர்பு எண்: 7010548069