தொழிலாளி - கனவுகளும் பலன்களும்

தொழிலாளி - கனவுகளும் பலன்களும்

நீங்கள் ஓர் இயந்திரத் தொழிலாளியைக் கனவில் கண்டால் நீங்கள் எந்த அளவுக்குச் சுகமான (அதாவது உழைப்பு இல்லாத) வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் சிரமங்கள் கூடுதல் ஆகும். நீங்கள் கடினமாக உழைத்தாக வேண்டியது இருக்கும். ஆகையால் முதலிலேயே கடினமான உழைப்புக்கு தயார் ஆகிவிடுங்கள். உங்களுக்குச் சுகமான வாழ்க்கை கிடைக்கும்.
 
நீங்கள் ஒரு சலவைத் தொழிலாளியைக் கனவில் கண்டால் உங்கள் தகுதிக்கும் மேற்பட்ட ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்கான சில வசதிகள் உங்களுக்கு விரைவில் கிடைக்கப் போகின்றன. ஆனால், அந்த வசதி உங்களுக்கே சொந்தமானவையாய் இரா. அவை பிறருடைய பொருள்களாய் இருக்கும் என்றாலும் அந்தப் பொருள்களை நீங்கள் உங்களுக்கே சொந்தம் ஆக்கிக் கொள்ள ஆசைப்படாதிருக்கும் வரையில் அவற்றை நீங்கள் ஆனந்தமாக அனுபவிப்பதற்கு யாதொரு தடையும் இராது.
 
நீங்கள் ஒரு நெசவாளரைக் கனவில் கண்டால் ஒரு பெரிய மனிதருடைய இரகசியம் ஒன்றை நீங்கள் கண்டுபிடிக்கப் போகிறீர்கள். அது வெளியே தெரிந்தால் அவருடையமானமே போய்விடும். ஆகையால் அந்த இரகசியத்தை நீங்கள் யாரிடமும் வெளியிடாமல் காப்பாற்ற வேண்டும். அப்படி வெளியிட்டு விட்டீர்களானால், அவரால் உங்களுக்குப் பல தாங்கமுடியாத தீங்குகள் ஏற்படும். ஆகையால், எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.
 
நீங்கள் ஒரு பொற்கொல்லரைக் கனவில் கண்டால், சில பெரிய இடத்துப் பெண்களோடு நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு ஏற்படப் போகிறது. அந்தப் பெண்களும் உங்களிடத்தில் பிரியமாக இருப்பார்கள். அவர்கள் மூலம் நீங்கள் எத்தகைய வசதிகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தவறான ஆசைகளுக்கு மட்டும் உங்கள் உள்ளத்தில் நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது. அப்படி இடம் கொடுத்தால் இந்த ஆசைகள் நிறைவேறாதது மட்டும் அல்ல. நீங்கள் பல இன்னல்களுக்கும் உள்ளாவீர்கள்.
 
முடிதிருத்தும் ஒரு தொழிலாளியைக் கனவில் கண்டால் நீங்கள் சில வீணான தொல்லைகளையும் தேவையற்ற பொறுப்புகளையும் உங்கள் தலை மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு திண்டா டுகிறீர்கள். நீங்கள் அவற்றிலிருந்து விடுபட முயல வேண்டும். அதனால் சில உறவினர்களின் அல்லது நண்பர்களின் மனவருத்தத்துக்கு நீங்கள் ஆளாகாலாம். அதைப் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் கடமைகளை மட்டும் குறைவு இல்லாமல் செய்து முடித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் சௌக்கியமாக வாழ முடியும்.
 
மேலே குறிப்பிட்டவர்களைத் தவிர, பிற தொழிலாளர்களைக் கனவில் கண்டால் இன்னும் சிறிது காலம் வரை, உங்கள் வாழ்க்கையில் வறுமையும் செழிப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் (ஆனால் எந்தக் காலத்திலும் வேலையில்லாத் திண்டாட்டம் மட்டும் வரவேலராது). 
 
ஆகையால் செழிப்பான காலத்தில் சிக்கனமான வாழ்க்கை நடத்தி, வறுமைக் காலத்தைச் சமாளிப்பதற்கு வகை செய்து கொள்ளுங்கள்.
 
தமிழ்வாணன்