நன்கொடை

நன்கொடை

மனிதருக்கும் மனிதருக்கும் இடையிலான நன்றியை மட்டுமல்ல; மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான நன்றிக்கடன்களையும் உரிய வேளையில் செலுத்திவிடவேண்டும். உலக ஓட்டத்தோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் உங்களில், நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் உள்ளங்களுக்கு ஆறுதலாக, உங்கள் சார்பில் நாமே நேர்த்திக்கடன்களைச் செலுத்த இருக்கிறோம். இங்கு தரப்பட்டுள்ள அல்லது நீங்கள் நேர்ந்திருக்கும் வேறு கோயில்களில் உங்களுக்கான நேர்த்திக்கடனைச் செலுத்த இந்த இணையப் பக்கம் உதவுகிறது.

அன்னதானம்

வீட்டில் ஒரு விசேஷம் நடக்கையில், உணவுக்குப் பஞ்சமேயில்லாத உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து பரிமாறுவோம். ஆயினும் ஒரு வேளை உணவேனும் கிடைக்காதா என ஏங்கும் பல்கோடிப் பேர் இன்னும் நம்மிடையே இருக்கின்றனர். உங்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேட தினங்களில் அவ்வாறானவர்களின் பசியைப்போக்கி உங்களுக்கு மட்டுமன்றி உங்கள் சந்ததியினருக்கும் புண்ணியம் தேடிக்கொள்ள எம்மோடு கைகோருங்கள். 

முதுமையகம்

எதிர்பார்ப்பில்லாத அன்பை மட்டுமே செலுத்தி, காலத்தின் கொடுமையால் முதுமையகங்களில் தள்ளப்பட்டு, தனித்துக் கிடக்கும் அன்பிற்காக ஏங்கும் அனேக அன்னையரதும் தந்தையரதும் அகத்திலும் முகத்திலும் உங்களால் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்ய முடியும். எப்படி? இதோ உங்களுக்கான எங்கள் வழிகாட்டி!

ஆதரவற்றோர் இல்லம்

குழந்தையும் தெய்வமும் ஒன்றேயன்றி வேறில்லை. காப்பகங்களில் வாழும் இந்தச் சின்னஞ்சிறுசுகளும் தெய்வங்களே. உங்கள் கருணைப் பார்வைக்காக ஏங்கும் இந்தக் குட்டித் தெய்வங்களுக்கு நைவேத்தியமாக ஒருவேளை உணவையேனும் படைக்க தொடர்புகொள்ளுங்கள்.

கல்வி தானம்

கல்வியின்றி இருளடைந்திருக்கும் இளம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அறிவுச்சுடர் ஏற்றி, அவர்களது வாழ்க்கையை ஒளிமயமாக்க, நீங்கள் ஏன் ஒரு தீக்குச்சியாகவேனும் இருந்து உதவக்கூடாது? இங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்க வாருங்களேன்.