விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மிதுனம்

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மிதுனம்

திறமையை வளர்த்துகொண்டு செயல்படும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் ஆண்டு உங்களின் ராசிக்கு விரையகுரு ஜென்ம குருவாக வந்து அமர்வது நற்பலன்களை பெற்று தரும். அதுபோல மூன்றில் கேதுவும், பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும் அமர்வது உங்களின் வளர்ச்சிக்கு நல்ல பலனை பெற்று தருவார்கள்.
 
இந்த ஆண்டு துவக்கத்தில் ராகு / கேது 26-04-2025 முதல் கேது உங்களுக்கு முயற்சிகளின் மேன்மையை பெற்று தருவார். ஒரு காரியத்தின் வெற்றி நமது விடாமுயற்சியின் பயனாக கிடைக்க பெறுகின்றது அதன் மூலம் நமக்கு எந்த அளவு பலன் என்பதை கேது உங்களுக்கு சிறப்பாக செய்து, மேலும் மேலும் வெற்றியை பெற்று தருவார். அதுபோல ராகு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலிலும், உத்தியோகத்திலும் வெற்றியை பெற்று தரும். கிடைத்த வரை போதும் என்று எண்ணாமல் மேலும் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும்.
 
இந்த ஆண்டு துவக்கத்திலேயே குரு பெயர்ச்சியாகி, ராசிக்கு வருவது ஜென்ம குருவாக இருந்தாலும் மிதுனத்தில் எந்த கிரகம் அமர்ந்தாலும் விதுனம் இல்லை என்பது போல குரு பார்க்குமிடம் பலம் பெறும் பாக்கியஸ்தானத்தை பார்ப்பது வெளிநாட்டு தொடர்புகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். பூர்வ புண்ணியம் பலம் பெறும். திருமண தடைகள் நீங்கி, திருமண வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குறுகிய காலத் திட்டங்களில் முனைப்புடன் செயல்பட்டு நற்பலன்களைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்கு கைகூடும். உங்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேறும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:  
 
புதன், வியாழன், ஞாயிறு.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: 
 
பச்சை, மஞ்சள், ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட எண்கள்: 
 
3, 5, 9.
 
பரிகாரங்கள்:
 
செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து முருகன் வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றி சிவப்பு, நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் வெற்றியை பெற்றுத் தரும்.