புரட்டாசி மாதம் கும்ப ராசிகாரர்களுக்கான பலன்கள்!

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய பாக்கிகள் வந்து விடும், பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும்.. செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுக்காக செலவுகள் செய்வீர்கள், நிலம் வீடு போன்ற வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.. புதன் 2ம் தேதி முதல் எட்டாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகப்படுத்த வேண்டும் 20ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.. குரு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்,25ம் தேதி முதல் தொழில் நிலை மேன்மையடையுன்.. சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். சனி பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும், மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ராகு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்திற்க்காக செலவுகள் அதிகரிக்கும்.