புரட்டாசி மாதம் தனுசு ராசிகாரர்களுக்கான பலன்கள்!

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும், அப்பாவின் மூலம் நன்மைகள் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை வருமானம் அதிகரிக்கும், கோபமான பேச்சுகளை தவிர்க்கவும். புதன் 2ம் தேதி முதல் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் 20ம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.. குரு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் நகைகள் வாங்குவீர்கள். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலைப்பளு அதிகரிக்கும், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது இரண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை.