அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - விருச்சிகம்

அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - விருச்சிகம்

உழைப்பால் உயர வேண்டுமென்று எண்ணும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் விரையஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் லாபஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் செய்யும் தொழிலே தெய்வமென்று கடமையை செய்து பலன் தானே வரும் என்று உணர்ந்து செயல்பட்டவர்களுக்கு இறைவன் நல்ல பலனை பெற்று தருவார்.
 
உங்களின் ராசிக்கு இதுவரை குரு அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் வரும் 08-10-2025 முதல் அதிசாரமாக பாக்கியஸ்தானத்திற்கு வருவது உங்களின் ராசியை பார்ப்பதும் உங்களின் சகல வித கஷ்டங்களிலிருந்து விடுபட்டு மேன்மை அடைவீர்கள். விரையாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது உங்களின் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு நல்ல பலனை பெற்று தரும். துணிச்சலுடன் எதையும் செய்வீர்கள். கஷ்டம் வரும் போது அது பற்றி கவலைபடாமல் தன் கடமையை செய்து நற்பலன் பெறுவீர்கள்.
 
பணியாளர்களுக்கு வேலை பளு இருக்கும். அதற்கு தகுந்தபடி உங்களின் உடலை சரி செய்து கொள்வீர்கள். எதிரிகளிடம் அதிகம் பேசுவதை குறைத்து கொள்வீர்கள். தொழிற்சங்க தலைவர்கள் விடாமுயற்சி மூலம் பல நற்செயல்களை பெற்று தருவார்கள். முதலீடு இல்லாத தொழில் செய்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தாயார் உடல்நலனை பாதுகாக்க வேண்டி வரும். உங்களின் அன்றாட தேவைகளுக்கு பண வரவு இருக்கும். உங்களின் யோகாதிபதி சந்திரன் தன ஸ்தானத்தில் இருப்பது பொருளாதார புழக்கம் நல்ல நிலையில் இருக்கும். இறை தொண்டுகளையும் விரும்பி செய்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டு பொருள் உதவி, உடல் உழைப்பையும் தந்து இறை அருள் பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
சிவப்பு, வெண்மை, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, கிழக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
ஞாயிறு, திங்கள், வியாழன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
12-10-2025 ஞாயிறு காலை 08.35 முதல் 14-10-2025 செவ்வாய் கிழமை பகல் 11.58 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு வண்ண பூ வைத்து நெய் தீபமிட்டு, நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்று, வேண்டிக்கொள்ள அனைத்து காரியமும் வளம் பெறும்.