அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - மேஷம்

அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - மேஷம்

வாழ்க்கை வளமாக வாழ்வதற்கே..! என உணர்ந்து செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் உங்களின் ராசியை பார்வை இடுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். குருவின் பார்வை இடும் இடங்கள் சிறப்பாக அமையும். சொந்த தொழில் செய்து வருபவர்களுக்கு வீண் அலைச்சலும், விரயமும் உண்டாகும்.
 
உங்களின் ராசிக்கு விரயாதிபதி குரு மூன்றில் மறைந்திருந்தாலும் ராசிநாதனையும், சந்திரனையும், சனியையும் பார்ப்பது உங்களின் சகல காரியங்களுக்கும் ஊக்கம் தருவதுடன் பொருளாதார வளத்தையும் பெற்று தருவார். எனினும் வீண் அலைச்சலும், செலவீனமும் உண்டாகும் என்பதால் அத்தியாவசியமான செலவுகளை தவிர பிறவற்றை தவிர்ப்பது நல்லது.
 
சுகஸ்தானாதிபதி சூரியன் ஆறில் அமர்ந்து எதிரிகளிடமிருந்து விடுதலை பெறும் சூழ்நிலையை தருவார். ஏழுக்குரிய சுக்கிரன் ஐந்தில் அமர்வது கலைத்துறையினருக்கு நல்ல வருமானத்தையும், அந்தஸ்தையும் பெற்று தருவார். கலை உலக பாராட்டுகளை பெறுவீர்கள். பல நாட்கள் தயங்கிய உங்களின் காதலை சொல்லி, அதில் வெற்றிப் பெறுவீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு சரியான பயிற்சியுடன் சுயமுயற்சியும் சேர்ந்து மேன்மை அடைவார்கள். எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் உங்களில் முழுமையான கவனத்தையும் சொந்தங்கள், உறவுகளுடன் செலவழித்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உண்டாகும். துணிச்சல் அதிகரிக்ககூடும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
ஆரஞ்சு, வெண்மை, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, தெற்கு, தென் மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
செவ்வாய், ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
23-10-2025 வியாழன் இரவு 10.02 முதல் 26-10-2025 ஞாயிறு காலை 09.32 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வீட்டிற்கு முன் மஞ்சள் நீர் தெளித்து கோலமிட்டு நெய் விளக்கு ஏற்றி பழம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.