அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - கும்பம்

அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - கும்பம்

குறுகிய காலத்தில் எதையும் செய்து முடிக்கும் கும்ப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி ராசியில் அமர்வதும் குரு பார்வை பெறுவதும் சின்ன விடயத்தில் கூட நன்மை கிடைக்கும். அரசியலிலும், தனி மனித செல்வாக்குகளிலும் உங்களின் நிலை உயரும். எதை செய்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து செய்கிறீர்களோ அதை சரியாக செய்து முடிப்பீர்கள். சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டால் அது சரியான தீர்வை தராது.
 
ஜென்ம ராகு உடல் நலனையும் மன நலன்களையும் பாதிக்க செய்யும் என்றாலும், குரு பார்வை பெறுவதால் சற்று குறையும். 8ந் திகதி முதல் அதிசார குரு வந்த பின்பு மீண்டும் மனகுழப்பம் உண்டாகும். அரசியல் தந்திரங்களை பிறருக்கு கற்றுக் கொடுப்பீர்கள். அவர்கள் அதை பயன்படுத்தி தன்னை மேம்படுத்தி கொண்டு உங்களை மறந்து விடுவார்கள். குடும்ப பாரம் பெரிது என்றாலும்.. அதனை நீங்கள் சுமக்கும் கட்டாயம் வராது. கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். திருவிழா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வருமானம் ஒரு பங்கு செலவு இரண்டு பங்கு என்று எதிலும் சில சிரமம் உண்டாகும். எளிதில் சமாளித்து விடுவீர்கள். 
 
லாபஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து குரு பார்வை பெறுவது தொழிலிலும், உத்தியோகத்திலும் பண புழக்கமும். உங்களுக்கு ஆதாயமும் பெற்று தரும். வங்கியில் இருப்பு அதிகரிக்கும். மாத இறுதியில் செலவு வந்து இருப்பு குறையும். அத்தியாவசியமான செலவுகளை தவிர மற்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. பாக்கியஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாயும் அட்டமாதிபதி புதன் இணைவு பெறுவது தொழிலில் சில சிரமம் இருந்தாலும் உங்களின் தனி திறமையான சரி செய்து கொள்வீர்கள். எதையும் எடுத்தேன் கவிழ்தேன் என்று இல்லாமல் சரியாக முன் யோசனையுடன் செயல்பட்டு வெற்றியை காண்பீர்கள். அன்றாடம் அழியும் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அதிக முதலீடுகளை தவிர்த்து, குறைவாக லாபம் கிடைத்தாலும் போதும் என்று முதலீடை குறைத்து கொள்வது நல்லது.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், வெள்ளை, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, தென்மேற்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
சனி, ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
18-10-2025 சனி இரவு 12.38 முதல் 21-10-2025 செவ்வாய் காலை 10.32 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமை காலை 06 - 07 மணிக்குள் விநாயகர் வழிபாடு தேங்காய் எண்ணெய் விளக்கேற்றியும். ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் வைத்தும் வேண்டி வர சகல காரியமும் வெற்றியை தரும்.